சுவையான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

By Senthil

தேவையான பொருட்கள் :

பச்சரிசி -  2 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
துருவிய தேங்காய் - அரை மூடி

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறவும்.

ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.

பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வெந்ததும் இறக்கி சூடாக சாப்பிடலாம்.

.
மேலும்