வீட்டிலேயே பானி பூரி செய்யலாம் வாங்க?

By Senthil

பானி பூரி என்றால் அனைவருக்கும் நினைவில் வருபவை தெருவுக்குத் தெரு களைகட்டும் பானி பூரி கடைகள் தான். 

இத்தகைய பானி பூரியை நம் வீடுகளிலேயே செய்யலாம் வாங்க பார்ப்போம்...

செய்முறை!
முதலில், ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, உப்பு, பேக்கிங் சோடாவுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இதன் மீது, ஒரு ஈரத்துணிப் போட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும். மீண்டும் மாவை நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இந்த மாவை இரண்டு துண்டுகளாக எடுத்து, ஒரு உருண்டையை பெரியளவில் உருட்டி விரித்துக் கொள்ளவும்.


பின்னர், ஒரு சின்ன வட்டமான கப் எடுத்து மாவு மீது அழுத்தி சின்ன சின்னப் பூரிமாவாக எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன சின்னப்பூரிகளை போடவும். பூரி நன்றாக உப்பி, பொன்னிறமாக மாறியதும் எடுத்து ஆற வைக்கவும். அவ்ளோதாங்க.. பூரி தயார். இத்துடன், உருளைக்கிழங்கு மசாலா மற்றும், புதினா பானி சேர்த்து சாப்பிட்டால் சுவையான பானி பூரி தயார்

.
மேலும்