கோவிலில் கொடுக்கும் சுண்டல் போல் செய்வது எப்படி?

By Senthil

தேவையான பொருட்கள்: கருப்பு சுண்டல் - 1 கப் தண்ணீர் - 3 கப் தேங்காய் - 1/2 கப் (துருவியது) கடுகு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை வரமிளகாய் - 2 உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதற்கட்டமாக ஒரு பாத்திரத்தில் கருப்பு கொண்டக்கடலையை நன்கு சுத்தம் செய்துவிட்டு,  நீரில் 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். குக்கரில் உள்ள விசிலானது போனதும், 

அதில் உள்ள நீரை வடித்து, தனியாக சுண்டலை வைத்துக் கொள்ள வேண்டும். மட்டன் சிக்கன் மசாலா பவுடர் பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, 

வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும். பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்துள்ள சுண்டலை சேர்த்து 4-5 நிமிடம் கிளறி விட்டு, பின் அதில் துருவி வைத்துள்ள தேங்காய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 5-6 நிமிடம் கிளறி இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த கோயில் பிரசாதம் போன்ற சுண்டல் ரெடி

.
மேலும்