வீட்டிலேயே நெய் தயாரிக்கலாம் வாங்க?

By Senthil

வீட்டில் ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி, பின் தயிருக்கு உறை மோர் விடுவது போல் சிறிது மோரை விட்டு 5 மணிநேரம் வெளியே வைத்து உறைய வைக்கவும். பிறகு மீண்டும் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ந்தவுடன் வெளியே எடுத்து ஐஸ்க்யூப் சேர்த்து மிக்ஸியில் ஐந்து நிமிடம் அடிக்கவும்.

இவ்வாறு மிக்ஸியில் அடிப்பதால் வெண்ணெய் தனியாக திரண்டு வரும். பிறகு அந்த வெண்ணெயை சுத்தமான தண்ணீரில் கழுவி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் கழுவி எடுத்த வெண்ணெயை போட்டு உருக்கவும்.

வெண்ணெய் உருகி வரும்வரை வைத்திருக்கவும். வெண்ணெய் உருகி நெய் பதம் வந்ததும் ஒரு கொத்து முருங்கைக்கீரை போடவும். முருங்கை இலை வெடித்ததும் இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் ஒரு பாட்டிலில் அந்த நெய்யை வடிக்கட்டி வைக்கவும். 2 நாள் கழித்து லேசாக உறைய ஆரம்பிக்கும். இந்த நெய் எலுமிச்சை நிறத்தில் பார்க்க அழகாகவும், மணமாகவும் இருக்கும்.

சுவையாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சுத்தமான கமகமக்கும் நெய் ரெடி. 

.
மேலும்