நீரிழிவை கட்டுப்படுத்தும் முருங்கைக் கஞ்சி

By News Room

இரண்டு கிலோ அளவு முருங்கைக்கீரையில் நீர் சேர்த்து விழுதாய் துவையல் போல் அரைத்துக் கொள்ளவும். 

பின்னர் அரைத்த விழுதுடன் இரண்டு கிலோ பச்சரிசி கொட்டிக் கிளறவும்.

 இதனை இரண்டு நாட்கள் நிழலில் காய வைத்து உலர்த்திக் கொள்ளவும். 

பின்னர் அரை கிலோ சிறுபருப்பை லேசாக வறுத்து சேர்க்கவும். 

மிளகு, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றையும் மேற்கண்டவற்றுடன் சேர்த்து மாவாய் அரைத்துக் கொள்ளவும்.

இதில் தேவையான அளவு பொடியை எடுத்து நீரில் கலந்து கஞ்சியாக செய்து சாப்பிடலாம். அல்லது வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அடையாக செய்தும் சாப்பிடலாம். 

பிரசவித்த பெண்களுக்கு உண்டாகும் இடுப்பு வலிக்கு இது அற்புத உணவாகும். 

அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு இயல்பாக உண்டாகும் இடுப்பு வலி முழுமையாக குணமடைய, இந்த கஞ்சி மாவை தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டால் போதும்; பலன் நிச்சயம் உண்டாகும். 

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட சிறந்த பலனை பெறலாம். இந்த கஞ்சியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். உடலுக்கு வலிமை தரும் மிக சிறந்த உணவாகும்.

.
மேலும்