தினமும் சீரகத்தண்ணீர் குடிப்பதால்...

By Senthil

உடல் ஆரோக்கியம், இதனைத் தேடி நாம் வெளியே எங்கும் செல்லவேண்டாம். அன்றாடம் உபயோகப்படுத்தும், நம் வீட்டு கிச்சனில் உள்ள பொருட்களே போதும். அனைவரின் கிச்சனிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பொருட்களில் ஒன்று சீரகம். சமையலுக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதை பயன்படுத்தலாம். முதல்நாள் இரவில் சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பார்க்கலாம்.

சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அவை உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, கொழுப்பை கரைக்கிறது. உடல் எடை குறைப்பில் சீரகத்தின் பங்கு குறித்து ஆயுர்வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நமது உடலை நீரேற்றம் செய்யவும் இது உதவுகிறது. இதனால், உடலிலுள்ள நச்சுகளை நீக்கி சுத்தப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
 

.
மேலும்