சக்கரை வியாதியை குறைக்க வெந்தயப் பொடி பாயாசம்

By News Room

*தேவையான பொருட்கள்:- ஊற வைத்த முளை கட்டிய வெந்தயம் அரைகிலோ, கருப்பட்டி அரை கிலோ, ஏலக்காய் ஒன்பது, கஞ்சி வைக்கும் போது தேவையான பால் கால் லிட்டர், நாட்டுச் சர்க்கரை சிறிதளவு, உப்பு தேவைக்கு ஏற்ப ஒரு சிட்டிகை *செய்முறை:- வெந்தயத்தை காலையிலிருந்து இரவு வரை ஊற வைத்து, படுக்கப் போகும் சமயம் நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் கொட்டி மூடியினைப் போட்டு மூடி வைக்கவும். மறுநாள் காலையில் எடுத்துப் பார்த்தால் முளை கண்டிருக்கும். இந்த முளைகட்டிய வெந்தயத்தை வெய்யிலில் நன்றாக காய வைத்து கருப்பட்டி, ஏலக்காயை போட்டு பொடிக்கவும். இவ்வாறு தயார் செய்த பொடியில் ஒரு குழம்பு கரண்டி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் கரைத்து கொதிக்க விடவும். இத்துடன் நாட்டுச்சர்க்கரையை தேவையான அளவு போடவும். உப்புத்தூள் போடவும். பசும்பால் கால் லிட்டர் ஊற்றி நன்றாக ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். வாணலியில் நெய் மூன்று தேக்கரண்டி விட்டு தேவையானால் முந்திரி இருபது கிராம், காய்ந்த திராட்சை இருபது கிராம், பாதாம் பருப்பு இவைகளை வறுத்து ஒன்றிரண்டாக பருப்புகளை பொடித்துப் போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி விடவும். இவ்வாறு வாரம் 2 முறை குடித்து வந்தால் நல்ல பயன் கிட்டும் *இதன் பயன்கள்* சர்க்கரை வியாதிக்கு ஏற்றது. நரம்பு சம்பந்தமான பல நோய்கள் குணமாகும்

.
மேலும்