சுவையான கறிக்கோழிக் குழம்பு

By Senthil

சுவையான செட்டிநாடு கோழி குழம்பு இதனை நம் வீடுகளில் எளிதாக செய்யலாம் வாங்க பார்ப்போம்...

தேவையான பொருட்கள்

கோழி - 1 கிலோ, 
வெங்காயம் (பெரிய)- 1
தக்காளி - 2
மல்லித்தழை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 150 மிலி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
மிளகாய்தூள் - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சைமிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - 1 விரல் அளவு
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் துருவல் - 1/4 கப்
மிளகு - 1 1/2 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 1 சுண்டு விரல் அளவு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
நல்லெண்ணெய் - 100 மிலி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி

செய்முறைகள்

முதலில் கோழியை கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் தக்களியை அரிந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி முதலில் சீரகம் போட்டு பொறிந்ததும் சின்ன வெங்காயத்தை சேர்த்து, அதனை நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டை நறுக்கி சேர்த்து வதக்கவும், அதன்பின் மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தேங்காய் துருவல், மிள்காய்கள் எல்லாம்சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். 

பின்பு மல்லித்தூள் , கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு இறக்கி வைத்து ஆற விடவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு போடவும். 
அது வெடித்து கொண்டிருக்கும் போதே பிரிஞ்சி இலை, சீரகம் , வெந்தயம் போட்டு தீய விடாமல் லேசாக பொரிந்ததுமே அரிந்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு அது மசிய வதக்க வேண்டும்.

பிறகு மஞ்சள் மற்றும் மிளகாய் தூள்களை சேர்த்து கிளறி விட்டு, கோழியையும் இரண்டு தேக்கரண்டி உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு குறைந்த தீயில் சிறிது நேரம் வதங்க விடவும்.
அதற்குள் வதக்கிய பொருட்களை மிக்ஸியில் நன்கு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
அடுத்து வதங்கிய சிக்கன் கலவையில் அரைத்ததை ஊற்றி தாராளமாக தண்ணீர் ஊற்றி உப்பு சரிப்பார்த்துவிட்டு மல்லிதழை தூவி மூடி விட்டு, ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வைத்து இறக்கி விடவும்.

பின் குக்கரை திறந்து பார்த்தால், சுவையான கோழி குழம்பு தயார்.

.
மேலும்