கருப்புப் பூஞ்சை நோய்- அறிகுறிகளும், முன்னெச்சரிக்கையும்!

By News Room

இந்தியாவில் கொரோனாவைத் தொடர்ந்து மியூகோமைகோஸின் என்ற கருப்புப் பூஞ்சை நோய் தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருப்புப் பூஞ்சை நோய் குறித்த அறிகுறிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பார்ப்போம்!

அறிகுறிகள் என்னென்ன?

கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு, காய்ச்சல்.

முகத்தில் வீக்கம், வலி.

பார்வைக் குறைபாடு, பார்வைத் தெளிவாக இல்லாமல் இரட்டையாகத் தெரிவது.

மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

ஆரோக்கியமான உணவு அவசியம்.

கொரோனா சிகிச்சையின் போது ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வதால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

சர்க்கரை நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க வேண்டும்.

ரத்த சர்க்கரை அளவை சரிப்பார்க்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும்.



எப்படி கருப்புப் பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது?

காற்றில் பூஞ்சைகள் பரவியிருக்கும்.

அழுகிய காய்கறிகள், பழங்களில் இருக்கும்.

சுவாசிக்கும்போது மூக்கு திசுக்களைப் பாதிக்கும்.

ஆரோக்கியமான நபருக்கு பூஞ்சையால் பாதிப்பு இல்லை.

நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாக உள்ளவர்களைப் பாதிக்கும்.


கொரோனா பாதித்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கொரோனாவில் இருந்து மீண்ட பின் சத்தான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

வெளியே செல்ல நேர்ந்தால் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும்.

.
மேலும்