செரிமானப் பிரச்னைக்கு கறிவேப்பிலை சட்னியா?

By செய்திப்பிரிவு

செரிமானப் பிரச்சனையால் இருப்பவர்கள் தினமும் உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்து கொள்ளலாம்.

 

தேவையானவை:

 

கறிவேப்பிலை - ஒரு கப்

உளுந்தம் பருப்பு - இரண்டு டீஸ்பூன்

கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

பச்சை மிளகாய் - இரண்டு

புளி - சிறிதளவு

 

தாளிக்க :

 

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

 

செய்முறை :

 

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து ஆற விடவும்.

 

பிறகு, அதே கடாயில் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.

 

பிறகு, வறுத்த கறிவேப்பில்லை, வறுத்த உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, புளி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி பரிமாறவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE