அந்தரங்க வாழ்க்கைக்கு இது இருந்தால் 100% முழு திருப்தி?

By செய்திப்பிரிவு

பாலியல் வாழ்க்கையை ஆரோக்கியமானதாக மாற்றுவதுடன் இதில் ஆரோக்கியமும் ஒரு  முக்கிய பங்கு.  

தம்பதிகளுக்கிடையே தகவல் தொடர்பு இல்லாமல் இருத்தல், வயது காரணங்கள் மற்றும் விறைப்புத் தன்மை குறைபாடு  பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் உங்களுக்கு சிறந்த பாலியல் வாழ்க்கை கிடைக்காது என்று பொருள் கிடையாது.

உடலுறவை  உற்சாகமானதாக மாற்ற நீங்கள் சில விஷயங்களை பின்பற்றுவது அவசியம்.  தம்பதிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் முழு  நம்பிக்கை இல்லாமல் போவதே பாலியல் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பிறகு இருவரும் அவரார் உடலை பற்றியும் அது எவ்வாறு செயல்பட்டு வருகிறது  என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம்.   அவ்வாறு தம்பதிகள் இணையும்போது இருக்கும் இடம் சூழல் மற்றும் சரியான வசதிகளையும் கவனிப்பது அவசியம்.  அப்படி வசதியாக இருக்கும் பட்சத்தில்  தம்பதிகள் பாலியல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டால் நல்லது. அப்போது இருவரும் திருப்திகரமான பாலியல் உணர்வை உணர முடியும்.  இருவரும் கூச்சமின்றி பாலியல் விஷயங்கள் குறித்து வெளிப்படையாகவும், ஆசைகளையும் எதிர் பார்ப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

மேலும், தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் வளைந்து கொடுக்கும் தன்மை ஏற்படுத்திக் கொண்டால்  பாலியல் வாழ்க்கை  சிறப்பாக இருக்கும்.  பாலியல் குறித்த ஓர் இதழில் கூறியபடி ஓர் ஆய்வில்,  ஒர் இரவுகளில் ஒரு மணிநேரம் கூடுதல் தூக்கம் என்பது ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதில் 14 சதவீதத்தை அதிகரிக்கிறது. தூக்கமில்லாமல் உங்கள் மனநிலையை மோசமானதாக்கும். உங்கள் பாலியல் உந்துதலையும் இது குறைக்கும்.

அமினோ அமிலங்களை கொண்ட இறைச்சிகள்  உணவுகளை சாப்பிடுவதால் உடலுறவு கொள்வதற்கான தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். சுறு சுறுப்பான உடலுறவு வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து மிகவும்  முக்கியம்.

ஒரு சிலர், பெண்ணுறுப்பில் உள்ள வறட்சியை போக்க மசகு திரவங்கள் மற்றும் ஜெல் பயன்படுத்தி எளிதில் சரி செய்ய முடியும்.  சிலருக்கு பிடிக்கவில்லை எனில் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.  

முதலில், தம்பதிகளுக்குள் முத்தமிடுவது,  அரவணைப்பது என தொடுவதை சகஜமாக்கி கொள்ளுங்கள். இது  உடல் ரீதியான நெருக்கத்தை நிலை நிறுத்த உதவும்.

ஒரு சில உடற்பயிற்சிகள் மூலம் இடுப்பு பகுதியில் தசைகளை பலப்படுத்துங்கள். வலுவான தசைகள் உடலுறவின் போது வலுவான உணர்வுகளை ஏற்படுத்தும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE