தம்பதிகளுக்கு எச்சரிக்கை: உடலுறவு பிரச்னைக்கு தீர்வு என்ன?

By செய்திப்பிரிவு

இயல்பாக கரு உருவாதில் குழந்தைப்பேறு கிடைப்பதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ ரீதியாகச் சம பங்கு உள்ளது.

ஆரம்ப நிலையில் தம்பதிகள் அறிய வேண்டியவை.     திருமணமானவுடன் இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று நினைத்து சிலர் மாத்திரை, காண்டம் (காப்புறை -நிரோத் உபயோகித்து இருக்கலாம் .

நீங்கள் செக்ஸ் செய்தால் குழந்தை ஆகி விடும் என்று நினைத்து   சரியான உடலுறவில் ஈடுபடாமல்   தனித்து இருக்கலாம் . முறையான உடல் உறவு பற்றி தெரியாததால் உங்கள் உறவு முழுமை அடையாமல் இருக்கலாம் .

விந்து பெண் உறுப்பின் முன் பகுதியிலேயே விடப்படுவதால்  அது பெண் எழுந்து நிற்கும் பொழுதும் ,திரும்பி படுக்கும் பொழுதும் உள்ளே செல்லாமல் வெளியேறலாம் .
பெண் உறுப்பின் உள்ளே ஆண் உறுப்பை  செலுத்த முடியாமல் முன் பகுதியிலேயே விந்து வெளிப்பட்டு உறவு முடியலாம் .

ஆண் உறுப்பு   விறைப்பு தன்மை குறைவாக இருப்பதால் பெண் உறுப்பில் நுழைக்க முடியாமல் இருக்கலாம்.  வலி என்று பெண் சொல்லி விட்டால் ,அவள் முகம் சுருக்கினால் ,பயப்பட்டால் , முணகினால்,வெளியே யாரோ பேசுவது கேட்டல் ,போன் அடித்தால், அன்றைய தினம் நடந்த காரியங்கள் மனதில் நினைவுக்கு வந்தால் ,பெண் கோபமாக ,கவலையாக, அதிருப்தியாக இருந்தால் ,வீட்டில் சண்டை  நடந்திருந்தால் .

இன்று குழந்தை ஆகும் தினம்,பெண்ணுக்கு மாத விலக்கு ஆகி   14 ம் நாள்  ,இன்று முக்கியம் நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்று டாக்டர் சொல்லி ,மனைவி அதை வேத வாக்காக கருதி காத்திருந்தால் ,வேலை விஷயத்தில் கவலை ,பண பிரச்சனை ,  இப்படி ஆண் உறுப்பு விறைப்புடன் உறவில்  நீடிக்க முடியாமல் செய்ய பல காரணங்கள் உண்டு.

இப்படி பாதியில் துவண்டு போகும் ஆண் உறுப்பு காரணமாக  பல நேரங்களில் விந்து வெளியேற்ற இயலாமல்  மனம் கவலை அடையலாம் .இதை பெண் தெரிந்து கொண்டு பல கேள்விகள் கேட்கும் பொழுது தனக்கே தெரியாத ஒரு பிரச்சனைக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கலாம் .இல்லை பெண்ணுக்கு தெரியாமல் இருக்கட்டும் என்று நிலைமையை  சில காலம் சமாளிக்கலாம் .

இப்படி இல்லாமல் உறவு என்பது பாதியில் முடிவடைந்து  விந்து வரும் முன்பே ஆண் உறுப்பு சுருங்கி விடலாம் .எவ்வளவு நேரம் செய்தாலும் விந்து வர மறுக்கலாம் .

 மேற் சொன்ன இவை எல்லாம் சூழ்நிலை சிக்கல்களால் உண்டாகும் விறைப்பு  குறைபாடுகள் .

ஆகவே தம்பதிகள் தங்களுக்குள் முதலில் மனம்விட்டு பேசி பின்னர் முழு மனதுடன் உறவில் ஈடுபட்டாலே அனைத்தும் சுபம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE