இந்த கொழுப்பு எல்லாம் அவசியம்!

By

கொழுப்பு என்றாலே கெட்டது என்ற எண்ணம்தான் பொதுவாக உள்ளது. மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலுக்குத் தேவையானவை. அதில்தான் ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அது ஆரோக்கியமான வாழ்வுக்கு மிகவும் அவசியமானது. 

சாளை போன்ற எண்ணெய் மீன்களில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. அதனுடன் உயர்தரமான புரதச்சத்தும் வைட்டமின்கள், தாது உப்புக்களும் மீன்களில் உள்ளன. எண்ணெய் பொறிக்காத, வேக வைக்கப்பட்ட மீன்களை சாப்பிட்டு வந்தால் இதய நோய் வராது என்கிறன ஆய்வு முடிவுகள்!

வால்நட், பாதாம் போன்ற பருப்பு வகைகளில் நல்ல கொழுப்பு அதிக அளவில் உள்ளது. மீன் சாப்பிடாத சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு நட்ஸ் வகைகள் சிறந்த தீர்வாக இருக்கின்றன. நட்ஸ்களில் வைட்டமின் இ, மக்னீஷியம் உள்ளிட்டவையும் அதிக அளவில் உள்ளன. இவையும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து, இதய ரத்தநாள அடைப்பு நோய் உள்ளிட்ட பாதிப்பு வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

சியா சீட் மிகவும் நல்ல கொழுப்பு உள்ள விதை. 28 கிராம் சியா விதையில் 11 கிராம் கொழுப்புதான் உள்ளது. அதனுடன் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது. இதனால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. சியா விதையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் வராது. மேலும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

முட்டையில் அதிக கொழுப்பு உள்ளதால் அது நல்லது இல்லை என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு உள்ளதுதான். ஆனால் முட்டையில் உள்ள கொழுப்பு உடலுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை. மேலும் முட்டையில் கோலின் என்ற ஊட்டச்சத்து உள்ளது. ஒரு முட்டையில் ஒரு நாள் தேவையில் 57 சதவிகிதம் அளவுக்கு கோலின் உள்ளது. முட்டையில் நல்ல தரமான புரதமும் உள்ளது. எனவே, ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். சாப்பாட்டுடன் சாப்பிடுவதற்குப் பதில் இரண்டு உணவுக்கு வேளைக்கு இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடுவது நல்லது!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE