சுவையான அவல் உப்புமா

By

சுவையான அவல் உப்புமா செய்வது என்பதை இதோ பார்க்கலாம்!

இதற்கு தேவையான பொருட்கள் : 
அவல் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

தற்போது செய்முறையை பார்ப்போம்..

முதலில் அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் வரை நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பின் அடுப்பை பற்றவைத்து, வாணலையை வைத்து, சூடு ஏறியதும் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

பின்பு, வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஊறவைத்த அவலை எடுத்து இத்துடன் சேர்த்து கிளரவும், பின்பு, அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைத்து, பின் கீழே இறக்கவும்... இப்பொழுது சூடான சுவையான அவல் உப்புமா  ரெடி

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE