மூலிகை – கடுக்காய்

By செய்திப்பிரிவு

மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய ரத்தம் வருவது நின்று விடும்.

கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசி வர புண்கள் ஆறும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் சோ்த்து திாிபலா என்னும் பொடியாக தயாா் செய்கிறாா்கள். இந்த திாிபலா எனும் மருந்தை 48 நாட்கள் தொடா்ந்து பாலிலோ வெந்நீாிலோ சாப்பிட்டு வந்தால், நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழ முடியும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. இப்படியாக கடுக்காயின் பலன்கள் அளவற்றதும், விலை மதிக்க முடியாதவையும் ஆகும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE