முருங்கை இலை பொடியில் என்ன நன்மை?

By செய்திப்பிரிவு

முருங்கையின் காய்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள், பட்டை, மலர்கள், விதைகள் அனைத்தும் மருத்துவ குணம் மிகுந்தவை.

முருங்கை பொடியில் பல ஊட்ட சத்துக்கள் உள்ளடக்கியது. முருங்கையில் அதிகளவு விட்டமின்களும், மினரல் மற்றும் அமினோ ஆக்ஸிடண்டுகள் உள்ளன.
 
முருங்கை இலை பவுடரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவுகிறது.

முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு, கார்டிவாஸ்குலர் இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.
 
சர்க்கரை நோய் அறிகுறிகள் இது உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும்.
 
முருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள் கல்லீரல் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை, மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE