இருவகை உண்டு பூக்களை கொண்டு பயன் பாடு மாறும்.
வெள்ளை நிற பூக்கள் பூக்கும் வகை வெளி உபயோகம் செய்யும் வகை !
மஞ்சள் நிற பூக்கள் பூக்கும் மூலிகை உள் உபயோகம் செய்யும் வகை!
வெள்ளை பூ கரிசலாங்கண்ணி இலைசாற்றில் தான் முன்பு கண்மை தயார் செய்து பயன் படுத்தி வந்தோம் அந்த மை கண்களுக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் கொடுத்து தற்போது உபயோகம் செய்யும் கண் மை எல்லாம் கெமிக்கல் மட்டுமே!
ஆயுர்வேதம் இதை பிருங்கராஜ் என்று இதை குறிப்பிடுவார்கள் !
தலைமுடிவளர இளநரை மாற காமாலை மண்ணீரல் கணையம் கல்லீரல் வேலைசெய்ய என்று பலவகையான பலன் தரும் மூலிகை!
உடலை பொன் போல் புடம் போடும் மூலிகை மஞ்சள் கரிசலாங்கண்ணி! இதனை உபயோகம் செய்யும் முன் இதை நேரடியாக பயன் படுத்த கூடாது .
மஞ்சள் கரிசலாங்கண்ணி பச்சையாக பலர் பயன்படுத்த மருத்துவ பலன் சொல்கிறார்கள். குழந்தை களுக்கு இரண்டு சொட்டு பெரியவர்களுக்கு 8 சொட்டு சாறு கலந்து தேன் கலந்து கொடுத்தால் சளி இருமல் கோழை சரியாகும் என்று ஈஸியாக எழுதுகிறார்கள் . எப்படி சரியாகும் என்று விபரம் அதில் சொல்வதில்லை இப்படி பச்சையாக சாறு கொடுத்தால் வாந்தியாக சேர்த்து வெளியே வரும் ! ஏற்கனவே பச்சை இலைச்சாறு மருந்து சாப்பிட பலருக்கு பயம் இதில் மறு பதில் வரும் போது நமக்கு இன்னும் குழப்பமே வரும் மருந்து வேலை செய்யும் முன் வாந்தியாக வந்து விட்டதே என்ற செய்யலாம் என்று மறுபடியும் ஒரு முறை கொடுப்பதா இல்லை இதோடு விடுவதா என்று புது கேள்வி வரும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை நேரடியாக பச்சையாக உணவில் சேர்க்க கூடாது...
சமையல் செய்து சாப்பிடலாம் (தஞ்சையில் இன்றும் ஒரு எலும்பு முறிவு சித்த வைத்தியர் வைத்தியம் செய்து விட்டு மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை போட்டு சமைத்த உணவை சாப்பிட வைத்து விட்டு தான் அனுப்புவார்)
வெள்ளை கரிசலாங்கண்ணி வெளி உபயோகம் செய்வதால் அதை பச்சையாக பயன் படுத்த எந்த தடையும் இல்லை...