செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகினால் இளமை கூடும்!

By சரவணன்

தற்போது தண்ணீர் பருகப் பயன்டுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள்  உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.

முன்னோர்கள் பயன்படுத்திய செம்புப் பாத்திரங்கள் நூறு சதவீதம் உடலுக்கு நன்மைகளை தருபவை. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

** செம்புப் பாத்திரங்களில் தண்ணீர்  குடிப்பதால் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும்.

** செம்பில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படும்.

** ஆண்களுக்கு ஆண்மையை குறையாமல் இருக்கும்.

** வயிறு சார்ந்தப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக ஒழிக்கும்.

** தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்த, சீரான முறையில் செயல் இயக்கம் நடைப்பெற,  செம்புப் பாத்திரங்கள் உதவுகிறது.

** செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் பருகினால் மூட்டு வலி குறையும்.

** செம்பு நம் உடலில் செல்கள் புதிதாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். உடலில் ஏற்படும் காயங்களை குணமடையச் செய்கிறது.

** மூளையில் நியூரான்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.  

** செம்பில்  தண்ணீரை பருகினால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.

** சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் உற்பத்தி செய்யவும், இரத்த சோகை வராமல் இருக்கவும் உதவும்.

** பிரசவக் காலங்களில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.  

** புற்றுநோயை உருவாக்கும் கிருமிகளை வராமல் தடுக்கும்.

** செம்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தின் முதிர்ச்சி தன்மையைக் குறைத்து இளமையாக வைத்துக் கொள்ளளும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE