செய்முறை:
முடவாட்டுக்கால் மூலிகையைப் பதப்படுத்தி மருந்தாகச் செய்யத் தெரியாத வர்கள் இதை சூப் செய்து சாப்பிடலாம். முடவாட்டுக்கால் மேல்தோலைச் சீவி பொடிப் பொடியாக நறுக்கிச் சிறிது மஞ்சள் பொடியும் உப்பும் போட்டு வேகவைத்து பிறகு வடிகட்டி அந்த மூலிகைச் சாறை (சூப்பாக) தினசரி இரண்டு வேளை குடிக்கலாம்.
இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி மற்றும்புளி சேர்க்காமல் மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சி, பட்டை, ,கிராம்பு கசகசா, தேங்காய் துருவல் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும் பின்பு இதை 1 லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும், சூப்பாக இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர,
கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.