அகத்திக்கீரை - இரத்தத்தை சுத்தமாக்கிபித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.
கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை கல்லீரலை பலமாக்கும். காமாலையை விலக்கும்.
குப்பைகீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.
புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.
சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
வெள்ளை கரிசலைக்கீரை - இரத்தசோகையை நீக்கும்.
முரங்கைக்கீரை -நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும்
வாயு விலகும்.
புண்ணக்கீரை - சிரங்கும். சீதளமும் விலக்கும்.
புதினாக்கீரை - இரத்தத்தை சுத்தம் செய்யும்,
அஜீரணத்தை போக்கும்.
நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.
தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.
முருங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.
முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை
தணிக்கும்.
புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.
மணலிக்கீரை- வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண்
குணமாக்கும். தேமல் போக்கும்.
முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.
சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காசநோய்களை விலக்கும்.
தூதுவலை-ஆண்மை தரும். சருமநோயைவிலக்கும்.
சளித்தொல்லை நீக்கும்.
தவசிக்கீரை - இருமலை போக்கும்.
சாணக்கீரை - காயம் ஆற்றும்.
வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.
கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.
துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.
துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும்.