தினசரி இரண்டு முட்டை நோய்க்கு குட்பை!

By தேஜஸ்

முட்டை புரோட்டின் சத்து மிகுந்த உணவாகும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லதொரு உணவாகும்.

ஒரு முட்டையில் 
சராசரியாக 7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 75 கலோரிகள், 185 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 70 மில்லிகிராம் சோடியம், 67 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளன.

இவை தவிர, விட்டமின் ஏ, டி, பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் லுடீன் (Lutein), சியாக்சன்தீன் (Zeaxanthin) ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கின்றன.
எனவே, முட்டையை அவித்தோ, மிளகு சேர்த்த ஆம்லேட்டாகவோ, வயதைக் கருத்தில் கொண்டு பச்சையாகவோ தேவைக்கேற்ப சாப்பிடுவோம்.

முட்டையை வேகவைப்பதால், அதிலுள்ள உடலுக்குத் தேவையான செலினியம், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் குறைந்துவிடும், எனவே, அரைவேக்காடான முட்டைகள் சாப்பிடலாம் என நினைப்பது தவறு.

அரைவேக்காடான, முட்டை முழுமையாக வேகாததால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது.

இது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு உகந்ததல்ல. வேகவைக்கும்போது, சத்துக்களின் அளவு குறைந்தாலும், நோய்ப் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.

தினசரி இரண்டு முட்டைகளை வேகவைத்து 
உப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவதால் 12 கிராம் புரோடீன் சத்து உடலுக்கு கிடைக்கும் இது முந்திரி பாதாம் நிலக்கடலை 50 கிராம் சாப்பிட்டால் கிடைக்கும் அளவாகும். 

காலை உணவு தவிற்பவர்கள் இரண்டு முட்டைகளை அவித்து சாப்பிட்டு வேலைக்கு செல்லலாம் 
உடலுக்கு தேவையான ஊட்டசத்து கிடைக்கும்.
 
முட்டை வெள்ளைக்கரு மஞ்சள்கரு இரண்டுமே சாப்பிடலாம் ஆனால் இரண்டுக்கு மேல் கூடாது ..
தினசரி இரண்டு முட்டை கொரோனா முதற்க்கொண்டு எந்த நோயும் நம்மை அண்டாது.. 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE