தேவையானவை:
மணத்தக்காளி கீரை
சின்ன வெங்காயம் 10
4 பல் பூண்டு
கால் ஸ்பூன் வெந்தயம்
கால் ஸ்பூன் சீரகம்
ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
இரண்டு வரமிளகாய்
தேங்காய் பால் ஒரு கப்
தேவையான அளவு உப்பு
மஞ்சள் தூள்
செய்முறை
அரிசி ஊற வைத்த தண்ணீரை இரண்டு கப் எடுத்துக்கவும்
மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இரண்டு தடவை அலசி சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் சீரகம் இடித்த பூண்டு வர மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் வதக்கிய பின் நறுக்கி வைத்த மணத்தக்காளி கீரையை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
கீரை இரண்டு நிமிடம் வதக்கிய பின் மஞ்சள் தூள் உப்பு அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
கீரை ஐந்து நிமிடம் வெந்தபின் தேங்காய் பாலை சேர்த்த உடன் ஸ்டவ்வை ஆஃப் செய்து விடவும்
இந்த மணத்தக்காளி கீரை தண்ணீர் சாறு சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம் இல்லையென்றால் சூப்பாகவும் குடிக்கலாம்