மனைவி வசிய சூட்சமம் எப்படி?

By செய்திப்பிரிவு

பொதுவாக, இன்றைய சூழலில் சிலருக்கு திருமணம் தாமதமாகிறது.


சிலருக்கோ காதல் திருமணம் நடக்கிறது. பெரும் பணக்காரர்களோ... பிரபல நட்சத்திரங்களோ ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டு அதே வேகத்தில் விவாகரத்து செய்கின்றனர்.

இதற்குக் காரணம் ஜாதகத்தில் உள்ள கோள்களின் கூட்டணியென்று தான் கூறவேண்டும்.

மண வாழ்க்கையில் குழப்பங்கள், சிக்கல்கள், மனமுறிவு, வழக்கு, விவாகரத்து போன்ற துயரங்கள் ஏற்படுவதற்கு சில கிரக அமைப்புகளே மூலகாரணம்.

இந்த விஷயத்தில் குரு இருக்கும் இடம், சனி பார்க்கும் இடம் தன, குடும்பஸ்தானம் எனும் இரண்டாம் இடம், களத்திரஸ்தானம் எனும் ஏழாம் இடம் ஆயுள், மாங்கல்யஸ்தானம் எனும் எட்டாம் இடம் முக்கியம்.
சரி இது ஜோதிட பதிவு அல்ல.

ஆகையால் நான் இந்த பதிவில் கூறவந்த செய்தியை சுருக்கமாக கூறிவிடுகிறேன்.

கணவன் மனைவி இருவரின் தோல்வியில் ஒரு குடும்பம் ஜெயிக்க வேண்டும்.
எந்த வீட்டில் ஒரு பெண்ணை அடக்கி ஒரு ஆண் ஜெயிக்கிறானோ
அங்கே ஓர் மிருகம் ஜெயிக்கிறது என்று பொருள்.., எந்த வீட்டில்
ஒரு ஆணை அடக்கி ஒரு பெண் ஜெயிக்கிறாளோ அங்கே ஓர் அடங்கா பிடாரி ஜெயிக்கிறது என்று பொருள்..,
எந்த வீட்டில் கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும்
தோற்றுப்போகிறார்களோ அங்கே ஒரு குடும்பம் ஜெயிக்கிறது
என்று பொருள்.

இப்படித்தான் சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தோற்று அந்த குடும்பத்தை ஜெயிக்க வைக்கின்றனர்.

இந்த பதிவின் நோக்கம் கணவனுக்கு அடங்காத மனைவியை எப்படி அடக்கிவைத்து குடும்பத்தை சிறப்பான வழியில் கொண்டுபோகலாம் என்பதை பற்றியது தான்.

இந்த வசிய முறையை உங்கள் மனைவிக்கு மட்டுமே செய்ய முடியும்
பிறருக்கு செய்தால் வேலை செய்யாது.

கணவனுக்கு அடங்காத மனைவியென்றால் பாலியல் ரீதியான தவறான பாதையில் செல்லும் பெண்கள் மட்டும் அல்ல,
ஆண்களை அடக்கி ஆளததுடிக்கும் பெண்களுக்கும் இது பொருந்தும்.
நான் எல்லாப்பெண்களையும் தவறாக கூறவில்லை அதேபோல் எல்லா ஆண்களும் உத்தமார்களும் கிடையாது.

ஒரு குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி போன்றவை நிலவ வேண்டுமென்றால் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி குடும்பநலனுக்காக யாராவது ஒரு தோற்றே ஆகவேண்டும் என்பது தானே நியாயம்....?

சரி, இப்போ அடங்காப்பிடாரி மனைவியை அடக்கும் முறையை கூறுகின்றேன் இதேபோல நீங்கள் முயற்சி செய்துப்பாருங்கள்.
கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று அமிர்தயோகத்தில்
பதிவில் கொடுத்துள்ள படத்தை கவனியுங்கள்
இது தான் காட்டுமிளகு எனும் மிளகாரணை செடி.

இந்த செடி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து
பிறகு செடிக்கு மஞ்சள் நூல் காப்புக்கட்டி சர்க்கரை பொங்கலிட்டு வாழைப்பழம், தயிர், நெய், வெல்லம் வைத்து  ஒரு எலுமிச்சை பழம் அல்லது சிவப்பு சேவல் ஏதாவது ஒன்றை பலிக்கொடுத்து தூப தீபம் காட்டி ஆணி வேர் அறுபடாமல் செடியை பிடிங்கி எடுத்து ஒரு தங்க தாயத்தில் வேரை போட்டு தேவமோகினியை மனதில் நினைத்து வணங்கி வலது புஜத்தில் கட்டிக்கொண்டால் உங்களுக்கு அடங்காத உங்கள் மனைவி
உங்களுக்கும் உங்க பேச்சிக்கும் மதிப்பு கொடுத்து அந்நோன்னியமாக இருப்பார்கள்.

தேவையான ஆண்கள் இதை பயன்படுத்தலாம்.

இதே போல் பெண்களுக்கு அடங்காத ஆண்களை அடக்கி ஆள மற்றொரு வழியும் உள்ளது .

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE