பெண்களுக்கு முடி கொட்டுதல், நரைச்ச முடியா?

By செய்திப்பிரிவு

முடி உதிர்தல், இளநரைனு பொண்ணுங்க ரொம்பவே கஷ்டப்படுவாங்க.  இதோ டிப்ஸ்..

கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட் டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

அவுரி (நீலி), கரிசலாங்கண்ணி (பிருங்காதி) இது ரெண்டையும் சம அளவு எடுத்துக்கிட்டு, இதுகளைவிட 3 மடங்கு அதிகமா தேங்காய் எண்ணெய் சேர்த்து பதமா காய்ச்சணும். இதை தினமும் தலைக்கு தேய்ச்சுட்டு வந்தா... நரை விழுறது சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் ஒண்ணரை லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கி தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும், அதோட நரை விழுறதையும் தடுக்கலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE