தசைகளை வலுவூட்டும் தாடாசனம்

By செய்திப்பிரிவு

இதை பனைமர ஆசனம் என்று சொல்வார்கள். பனையானது காற்று அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர ஒடிந்து விடாது. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும்.

செய்முறை :

விரிப்பில் இரு கால்களையும் ஒன்றாக வைத்து நிற்க வேண்டும். கைகள் தளர்வாக பக்கவாட்டில் இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேலே உயர்த்தியபடியே, குதிகாலை உயர்த்த வேண்டும். தலைக்கு மேல் கைகள் சென்றதும், கைகளைப் பிணைத்து முடிந்த வரை முதுகை வளைக்க வேண்டும்.
ஓரிரு விநாடிகளுக்குப் பின் மூச்சை வெளியே விட்ட படி கைகளையும் குதிகால்ளையும் ஒன்றாகப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு ஆறு முதல் எட்டு முறை செய்யலாம்.


உடலின் அனைத்து தசைகளும் இழுக்கப்பட்டு, நல்ல ரத்த ஓட்டத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமாகிறது. தரைகளை வலுவடையச் செய்கிறது. முதுகெலும்பு பலம் அடைவதால், ஆரோக்கியம் கூடுகிறது.

கணுக்கால்கள், கெண்டைக்கால், கைகள், தோள்பட்டை தசைகள் கூடுதலாக இழுக்கப்படுவதால் வளரும் பருவத்தினருக்கு ஏற்றதாக அமையும். ரத்த ஓட்டம் சீராகி, நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு உடல் புத்துணர்ச்சி அடையும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE