எச்சரிக்கை: உடலுறவு முன்னும் பின்னும் கடைபிடிக்க வேண்டியவை!

By செய்திப்பிரிவு

தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ளும் முன்னரும், பின்னரும் கைகள் மற்றும் அந்தரங்க உறுப்புகளை  சோப்பு போட்டு நன்றாக வாஷ் செய்ய வேண்டும்.  சுத்தம் செய்ய மிதமான சூடான வெந்நீரை பயன்படுத்த வேண்டும்.  தம்பதிகள் பயன்படுத்தும் சோப்பில்  PH அளவு அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் யோனி, சிறுநீர் கழிக்கும் பகுதியில் எரிச்சல் உண்டாகும்.  

உடலுறவு என்பது  நல்ல உணர்வுகளைக் கொடுக்கும் விஷயம். இதனால் இரவு நேரத்தில்  தாம்பத்யம் வைத்துக்கொள்வது இருவருக்கும் புத்துணர்ச்சியை தரும்.  

உடலுறவுக்குப் பின் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது அவசியம். உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் வியர்வையை குளித்து சுத்தம் செய்ய வேண்டும். யோனியையும்  சுத்தம் செய்யப்பட வேண்டும். இது தம்பதிகளுக்குள் மிக நெருக்கத்தையும் ஆரோக்கியத்தையும் தரும்.

செக்ஸுக்கு முன்னும் பின்னும் உடலுறுப்புகளை கழுவிய பின் சுத்தமான உலர்ந்த ஆடைகளை அணிய வேண்டும்.  இவ்வாறு செய்யவில்லை என்றால் உறுப்பில் இருந்து வரும் நுண்ணுயிரிகள் யோனிக்குள் மற்றும் சிறுநீர் கழிக்கும் பகுதியில் தொற்றுநோயை ஏற்படுத்தும்.

தம்பதிகள் உடலுறவுக்குப் பின்பு  சிறுநீர் கழிப்பது நல்லது. இல்லையெனில் சிறுநீர் வெளியேறும் பகுதியில்  தொற்று நோய் ஏற்படும்.  உடலுறவுக்குப் பின்பு சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்துக்கொள்ளக் கூடாது.  

தம்பதிகளில் அந்தரங்கப் பகுதியில் ஏதேனும் தொற்று இருப்பின் மருத்துவர்களில் ஆலோசித்து சரியான பின்பே உடலுறவு கொள்வது அவசியம்.  தேவைப்பட்டால்  சில நாட்களுக்கு உடலுறவை தவிர்ப்பது நல்லது.  மாறாக காண்டத்தை பயன்படுத்துவதால் கூட தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

தம்பதிகளுக்குள்  சர்க்கரைநோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருப்பின் தாம்பத்யம் வைத்துக்கொள்வது சில நேரங்களில் தவிர்த்துக்கொள்வது அவசியம்.  

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE