பால் குடிப்பதற்கும் சளி பிடிப்பதற்கும் தொடர்பில்லை. என்றாலும், இந்த நம்பிக்கை காலம்காலமாக மக்களிடம் இருந்துவருகிறது. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
தண்ணீர் கலக்காத பாலைக் குடித்ததும், அதிலுள்ள ஒருவித கொழுப்புப் பொருள் நாக்கிலும், தொண்டையிலும் பிசுபிசுப்புத் தன்மையை ஏற்படுத்துகிறது. இதைத்தான் மக்கள் ‘சளி’என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய இடங்களில் ‘கோழைப் படலம்’ (Mucus membrane) என்ற அமைப்பு இருக்கிறது. இது ‘மியூசின்’ (Mucin) எனும் திரவத்தைச் சுரக்கிறது. சாதாரணமாகப் பார்ப்பதற்கு இது பளிங்கு மாதிரி இருக்கும்; பிசின் மாதிரி ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. சுவாசப் பாதை வறண்டுவிடாமல் இருக்க இதுவே உதவுகிறது.
காற்றில் கலந்து வரும் தூசு, கிருமிகள் போன்றவை இதில் ஒட்டிக்கொள்வதால், காற்று சுத்தமாகி நுரையீரலுக்குள் செல்கிறது. இப்படி, நம்முடைய இயல்பான சுவாசத்துக்கு இது தேவைப்படுகிறது