பொதுவாக எப்படியும் 2 மாதத்தில் கர்ப்பம்தரித்து இருப்பது தெரிந்துவிடும். 5வது மாதம் வரை கண்டிப்பாக உடலுறவு கூடாது. அடங்கி இருக்கவும். அதற்கு மேல் 5 to 8வது மாதம் வரை வயிற்றை அழுத்தாமல் குலுங்காத பொஷிசனில் உடலுறவு கொள்ளலாம்..வாரம் 2 முறை செய்யலாம். ஆனால் கட்டாயம் கிடையாது.
இதனால் நன்மை என்னவென்றால் பிரசவகாலத்தில் பெண்களுக்கு வரும் மன அழுத்தம் குறையும். பெண்ணின் பிறப்புஉறப்பு சற்று நெகிழ்வு தன்மை ஏற்படும்..இது சுகபிரசவம் எனில் சிரமம் குறையும். ஆனால் கண்டிப்பாக நிறைமாத காலத்தில் உடலுறவு தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் ஒருவன் யூடியூப்பில் ஒரு நபரின் வீடியோ பார்த்திருக்கிறான். அதில் நிறைமாத காலத்தில் உடலுறவு கொண்டால் பெண்ணின் பிறப்புறுப்பு நன்கு விரிவடையும், சுகபிரசவம் ஆகும் என கூறியுள்ளார். இவனும் இதை நம்பி வளைகாப்பு முடிந்து தன் அம்மா வீட்டுக்கு சென்ற தன் மனைவியை பார்க்க போவதுபோல போய் உடலுறவு வைத்து உள்ளான். இதை அறிந்த அந்த பெண்ணின் தாயார் எச்சரிக்கை செய்துள்ளார்.. ஆனாலும் இவன் அடங்கவில்லை.
முடிவில் பிரசவதேதிக்கு 20 நாட்களுக்கு முன்பே பெண்ணிற்கு தண்ணீர்குடம் உடைந்துவிட்டது. 10 மணிநேரம் மருந்துவர்கள் எவ்வளவுவோ முயற்சி செய்தனர். அந்த பெண்ணால் புஸ் (முக்கி தள்ள) பண்ணமுடியவில்லை. சோர்வாகிவிட்டாள். முடிவில் சிஸேரியன் என ஆகி விட்டது. முடிவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது..
அப்புறம் அவனது சொந்தகாரர்கள் எல்லாம் அவன் காதுபடவே "ஆள பாத்தா படுநீட்டா இருக்கான் இப்படி பண்ணிபுட்டானே என பேசினார்கள்". அதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் தன் ஆசை மகனை பார்க்க மாமியார் வீட்டுக்கு சென்ற அவனை அவன் காதுபடுவே.. மாமியார் தன் மகளிடம் சொன்னது என்னவென்றால்,
"உன் புருசனை நாங்க இருக்கிறப்ப உன்ன பார்க்க வரசொல்லுடி. இப்படிப்பட்ட ஆளை எல்லாம் நம்ப முடியாது". தன் மனைவியின் மேல் உள்ள பாசத்தால் அவள் சிரமபடாமல் சுகபிரசவம் ஆகத்தான் இப்படி செய்தான் என்ற அவனது நல்ல மனதை யாரும் புரிந்துகொள்ளவே இல்லை..பாவம் அவன்..எதிரிக்கு கூட இந்த நிலமை வரக்கூடாது.."