அத்தை மகளை மணக்கலாம். ஆனால் சித்தி மகளை?

By செய்திப்பிரிவு

ஒரு குழந்தை உருவாக ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையோடு சேர வேண்டும். தமிழர்கள் இதை இவ்வாறாக பார்க்கிறார்கள்.

ஆணின் விந்தணு உயிர். பெண்ணின் கருமுட்டை உடல். ஆக உயிர் கொடுப்பது ஆண், உடல் கொடுப்பது பெண், என்ற கொள்கையை நம்புகிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், சகோதரன் சகோதரியாக இருக்கக்கூடாது. அது எப்படி கண்டுபிடிப்பது? அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிர் கொடுத்தது ஒரே ஆளாக/மூலமாக இருக்க கூடாது!

எடுத்துக்காட்டாக , நான் என் சகோதரனை திருமணம் செய்ய முடியாது. ஏனென்றால் எனக்கும் என் சகோதரனுக்கும் உயிர் கொடுத்தது என்னுடைய அப்பா. அதாவது இருவருக்கும் உயிர் ஒரே மூலம்.

இப்போது இந்த கொள்கையை, நான் ஒரு ஆண் என்றால்,சித்தி மகளுக்கும் அத்தை மகளுக்கும் பொருத்திப் பார்ப்போம். சித்தி மகளுக்கு உயிர் கொடுத்தது, சித்தப்பா. என் அப்பாவின் தம்பி. அப்பாவும் சித்தப்பாவும் ஒரே உயிர் மூலம். ஆக, அவள் என் சகோதரியே!

ஆனால், அத்தை மகள் என்றால், அவளுக்கு உயிர் கொடுத்தது, வேறொரு ஆண் மூலம் ! ஆகவே அவளை நான் மணந்து கொள்ளலாம்!அக்கா மகளும் இதில் அடங்கும். ஏனென்றால், அக்கா மகளுக்கு உயிர் கொடுத்தது, அத்தான்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE