பெண்ணின் பார்வையிலிருந்து காமம்..

By செய்திப்பிரிவு

பெண்ணின் பார்வையிலிருந்து காமம் (என்ற புத்தகத்தில் இருந்து)

ஒரு பெண்ணிற்கோ, ஆணிற்கோ திருமண பந்தத்திற்குள் நுழையும் முன்.  இன்னோர் உயிரை எவ்வாறு தன் வாழ்வுடன் இணைக்கும் கலையை யாரும் சொல்லிக் கொடுப்பது இல்லை.

புதிதாக வரும் உறவை எவ்வாறு வளர்த்து செழிக்க வைக்க வேண்டும் என்று யாரும் சொல்லி கொடுப்பது இல்லை.

திருமண பந்தம் என்ற ஒன்று ஏற்படுத்தியதே தன் காம உணர்விற்கு ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்வதற்குத்தான். ஆனால் அது பின்பற்றபடுவது இல்லை.

நிறைய பெண்கள் தன் கணவர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களுக்கு பாலியல் இன்பத்தை வழங்க மறுக்கிறார்கள்.  இது அநேக வீடுகளில் சத்தம் இல்லாமல் இந்த யுத்தம் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதனால் ஆண்களின் உடல் நலம் மிகவும் பாதிக்கபடுகிறது.

ஆண்களை பொறுத்தவரை பாலுறவின் போது அவர்களின் (Cardiovascular  System (இருதயம் ) நன்கு இயங்கும்.  இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

எத்தனை இணையர்களுக்கு அது ஆணோ, பெண்ணோ, தன் இணைக்கு பாலுறவில் என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, எந்த தீண்டல்கள் அதீத கிளர்ச்சியை ஏற்படுத்தும், எது அருவருப்பை ஏற்படுத்தும் என்று
தன் ஆண்/பெண் இணையிடம் கேட்டால் தெரியாது என்றே பதில் வரும்.  

ஒரு சிலர் மட்டும் சிலவற்றை சொல்லுவார்கள்.  பலர் இதை பற்றி தெரிந்தும் கொள்ளவும் விருப்பம் இல்லை என்பார்கள்.

ஓர் இணைக்கு பாலுறவில் அதீத நாட்டம் இருக்கும். ஆனால் மற்றவருக்கு பாலுறவில் விருப்பம் இல்லாமல் இருக்கும்.

இதனால் பாலுறவு இல்லாமல் வாழ்நாள் முழுவதும் பாலியல் ஏக்கத்தில் பலர் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
துணிந்தவர்கள் மற்றொரு இணையிடம் நாட்டம் கொள்ளும் நபராக மாறவும் வாய்ப்புள்ளது.

இங்கு ஒரு பாலியல் சார்ந்த மனோதத்துவ கருத்து ஒன்று உள்ளது. எந்த கணவனோ/மனைவியோ பாலுறவு என்பது திருமண வாழ்வில்
ஒரு முக்கிய பகுதி என்று நீ நினைக்கவில்லையானால் நீ உன் இணைக்கு பாலுறவை வழங்க மறுத்தால் உனக்கு விருப்பம் இல்லாத அந்த பாலுறவை உன் மனைவியோ/கணவனோ தனக்கு பிடித்த இன்னொரு நபருடன் பாலுறவு கொள்வதில் உனக்கு எந்தவித
கருத்து வேறுபாடோ, அட்சேபனை இருக்க கூடாது.

பல காரணங்களுக்காக மறுக்கப்படும் தனக்கு வழங்காத பாலியல் இன்பத்தை வெளியில் தேடவே செய்வார்கள்  அல்லது தனக்கு பிடித்த மற்றொரு நபருடன் மனோரீதியான பாலியல் ஆசை ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE