சிறுநீர் ஒழுக்கு பிரச்னை தீர்வு என்ன?

By செய்திப்பிரிவு

வயதானவர்கள்,சர்க்கரை நோயாளிகளுக்கு சாதாரணமாக ஏற்படும் ஒரு நிகழ்வு சிறுநீர் ஒழுக்கு. சில பெண்களுக்கு இருமினால் அல்லது தும்மினால் அல்லது சிரித்தால் அல்லது உட்கார்ந்து எழுந்தால் அல்லது கனமான பொருட்களை தூக்கினால் சிறுநீர் வெளியாகி விடும். இதனை முழுமையாக சரிசெய்து விட வேண்டும் என சிலரும் ..

இது இப்படித்தான் இருக்கும் என சிலரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இதற்கான மாத்திரை மருந்துகளை சாப்பிட்டாலும் சில நாட்கள் சரியாக இருக்கும். ஆனால் இந்த பிரச்சனை மீண்டும் தலை தூக்கும்.

இது எந்த வகையான பிரச்சனை என்று தெரிந்து கொண்டால் மட்டுமே இதற்கான தீர்வை மேற்க்கொள்ளலாம்.

கிட்னியால் ஃபில்டர் செய்யப்பட்ட சிறுநீர் நேராக வெளியேற்றப்பட மாட்டாது. அது நேராக சிறுநீர் பை ( Urinary Bladder ) யில் வந்து சேரும். அந்த சிறுநீர் பை நிறைந்தவுடன் தான் நமக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வே தோன்றும். இது ஆரோக்கியமாக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

ஆனால் மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு சிறுநீர் பை பலஹீனமடைந்து சிறுநீரை அதிக அளவு தேக்கி வைக்கும் திறனை இழந்து விடும். இதனால் கொஞ்சமாக சிறுநீர் பையில் சேர்ந்தாலும் அதன் கனத்தை தாங்க முடியாமல் உடனே வெளியேற்ற துடிக்கும். எனவேதான் மேற்கூறப்பட்ட நபர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது.

இதற்கு என்ன செய்ய வேண்டும். சிறுநீர் பையை பலப்படுத்த வேண்டும். அதன் தாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். அப்படி செய்து விட்டால் அடிக்கடி சிறுநீர் வெளியேறாது.

இதற்கு மிகச்சிறந்த மருந்து பாலாக்கீரை. இதனை உணவில் தொடர்ந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையிலிருந்து முழுமையாக விடுபடலாம். கீரையை சமைத்து சாப்பிட் விருப்பம் இல்லாதவர்கள் கீழ்க்கண்டவாறு சூப் வைத்து சாப்பிடலாம்.

பாலாக்கீரை 5 இதழ்களை நன்றாக சிறுசிறு துண்டுகளாக வெட்டி 200 மில்லி தண்ணீரில் போட்டு ஒரு ஸ்பூன் சீரகம்,ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாக வற்றியதும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளை 15 நாட்கள் குடித்து வரவும்.

இந்த பிரச்சனையிலிருந்து முழுமையாக விடுபடலாம்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE