இந்த பழத்தில் உள்ள வைட்டமின் – ஏ மற்றும் வைட்டமின் – சி கண் பார்வையை அதிகரிப்பதோடு, பார்வை குறைபாட்டை தடுக்கும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல், உடல் தளர்ச்சி, சோர்வு போன்றவற்றை நீக்கி உடலுக்கு தேவையான சத்துகளை தாயுக்கும் குழந்தைக்கும் வழங்குகிறது.
நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு, வயிற்று உபாதைகளையும் குணப்படுத்தும்.
தினம் ஒரு சப்போட்டாப் பழம் சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் சோம்பல் இல்லாமலும் கழிக்கலாம்.
சப்போட்டாப் பழம் மட்டுமில்லாமல் விதைகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க உதவும்.
சப்போட்டாவில் உள்ள கால்சியம் மற்றும் மினரல்ஸ்கள் எலும்புகளுக்கு வலிமை அளித்து வயதானால் ஏற்படும் மூட்டுவலியை ஏற்படாமல் தடுக்கிறது.
தினம் ஒரு சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரித்து இரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
இந்த பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் வாய் மற்றும் குடலில் ஏற்படும் புற்றுநோயை வராமல் தடுக்கிறது...