உணவில் பாமாயில் - மாரடைப்பு பாதிப்பு வருமா?

By செய்திப்பிரிவு

நாம் நேரடியாக பாமாயிலை வாங்காவிட்டாலும், நாம் உண்ணும் Ultra processed உணவுகள் மூலம் இது நம் உடலுக்குள் நுழைந்து ரத்த நாளங்களை மெல்ல மெல்ல அடைக்கிறது.

இன்று நாம் உண்ணும் பிஸ்கட் முதல் சாக்லேட் வரை, நூடுல்ஸ் முதல் ஹோட்டல் உணவுகள் வரை அனைத்திலும் பாமாயில் இல்லாத பொருட்களே இல்லை. நாம் நேரடியாக பாமாயிலை வாங்காவிட்டாலும், "Vegetable Oil" என்ற பெயரில் மறைமுகமாக இது நம் உடலுக்குள் நுழைந்து ரத்த நாளங்கள் வரை செல்கிறது.

பிஸ்கட், சிப்ஸ், நூடுல்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் என நீங்கள் எதைத் தொட்டாலும் அதில் இந்த மெல்லக் கொல்லும் விஷம் கலந்திருக்கிறது.

இந்த பொருட்களை தயாரிப்பதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் மற்ற ஆரோக்கியமான எண்ணெய்களைப் பயன்படுத்துவதில்லை? காரணம் மிக எளிது - லாபம்.
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெயை விட பாமாயில் மிக மிக மலிவானது.

ஒரு பொருளின் உற்பத்திச் செலவைக் குறைத்து, அதன் 'Shelf Life' எனப்படும் அடுக்கு ஆயுளை நீட்டிக்க பாமாயில் மிகவும்உதவுகிறது.

பாமாயில் என்றால் என்ன? அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
பாமாயில் என்பது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது.

'ஆப்பிரிக்கவில் இருக்கும் ஒருவகை பனைமரமான 'Elaeis guineensis’ மரத்தின் பழங்களிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் ஒரு வகை தாவர எண்ணெய் தான் Palm Oil என அழைக்கப்படுகிறது.

மற்ற எண்ணெய்களை விட (நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்) இது மிகவும் மலிவானது. ஒரு ஏக்கர் நிலத்தில் மற்ற எண்ணெய் வித்துக்களை விட பனை மரம் பல மடங்கு அதிக எண்ணெயைத் தருகிறது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இது ஒரு லாபகரமான தேர்வாக உள்ளது.
பாமாயில் மற்ற எண்ணெய்களை விட ஆபத்தானதாகக் கருதப்படக் காரணம் அதன் Chemical compound தான்.

இதில் உள்ள Palmitic Acid ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை (LDL) உயர்த்துவதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது.

அதேவேளை அதிகப்படியான Saturated Fatயும் கொண்டது.

பாமாயிலில் சுமார் 50% saturated fat ஐ கொண்ட இந்த எண்ணை ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை (LDL) அதீதமாக உயர்த்துகிறது.

பாமாயிலை அதிக வெப்பநிலையில் (200°C க்கும் மேல்) சுத்திகரிக்கும் போது, அதில் புற்றுநோயை உண்டாக்கும் காரணி (Glycidyl fatty acid esters) உருவாகின்றது.

இந்த எண்ணெயைத் தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் பட்டியலிட முடியாதவை.
மாரடைப்பு (Heart Blockage), உடல் பருமன் (Obesity) , நீரிழிவு நோய் (Diabetes), Inflammation போன்ற பல பாதிப்புக்கள் கண்டிப்பாக ஏற்படும்.
உண்மை என்னவென்றால், பாமாயில் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்பது சுகாதாரத் துறைகளுக்கும், அரசாங்கத்திற்கும் நன்றாகவே தெரியும்.

மக்கள் நலன் காக்க வேண்டிய அரசாங்கங்கள், இன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாக மாறிவிட்டன என்பது கசப்பான உண்மை.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்காக அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் தலையிடுகின்றன., மக்கள் ஆரோக்கியத்தை விட கம்பெனிகளின் லாபமே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

பெரும் நிறுவனங்களின் தேர்தல் நிதி மற்றும் முதலீடுகளுக்காக, மக்களின் ஆரோக்கியத்தை அரசாங்கங்கள் கண்டுகொள்வதில்லை.

அரசாங்கம் ரேஷன் கடைகள் மூலம் இதை விநியோகிப்பதன் மூலம், இது பாதுகாப்பானது என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் விதைத்துவிட்டது. உண்மையில், மக்களின் உயிரை விட கார்ப்பரேட்களின் வருமானமே இங்கு மேலோங்கி நிற்கிறது.

மக்களை நோயாளிகள் ஆக்குவதே கார்ப்பரேட்களினதும் அரசினதும் முதன்மை இலக்கு.
நம்மைச் சுற்றியுள்ள உலகம் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது. எனவே, விழிப்புணர்வு ஒன்றே நம் ஆயுதம்.

ஒரு பொருளை வாங்கும் முன் அதன் பின்னணியில் உள்ள 'Ingredients' பட்டியலைச் சரிபார்க்கவும். 'Vegetable Oil' அல்லது 'Palm Oil' என்று இருந்தால் தயங்காமல் அதைத் தவிர்த்திடுங்கள்.

பொருட்களின் பாக்கெட்டுகளில் 'Palm Oil' என்று நேரடியாகப் போடாமல், மக்களை ஏமாற்றப் பல பெயர்களில் குறிப்பிடுவார்கள்:

• Vegetable Oil / Vegetable Fat (தாவர எண்ணெய்)
• Palmate / Palmitate
• Elaeis Guineensis
• Sodium Laureth Sulfate (சோப்புகள் மற்றும் ஷாம்பூக்களில்)
• Glyceryl / Stearic Acid என உங்களை பல வழிகளில் ஏமாற்றுவார்கள்.
கார்ப்பரேட்கள் நம்மை நுகர்வோராக மட்டுமே பார்க்கின்றன, மனிதர்களாக அல்ல.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE