வாயுப் பிரச்னை தீர எளிய வழிகள் - மிஸ் பண்ணாதீங்க!

By சரவணன்

உடலின் உட்புறத்தில் பல்வேறு இடங்களில் தோன்றும் ஒரு வகையான காற்றையே வாயு என்று சொல்கிறோம்.

a) தலையில் வாயு சேர்ந்தால் அதனை கபால வாயு என்றும்,
b)இதயத்தில் வாயு சேர்ந்தால் இதய (துமார) வாயு என்றும்,
c) குடலில் வாயு சேர்ந்தால் குடல் வாயு என்றும்,
d) உடலில் எதாவது ஒரு உறுப்பை செயலிழக்க செய்தால் பாரிசவாயு அல்லது பக்கவாதம் என்றும்,
e) கை, கால் மூட்டுகளில் ஏற்பட்டால் கீழ்வாயு என்றும்,
f) கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டால் கர்ப்ப வாயு என்றும்,
g) அதிக உஷ்ணம் காரணமாக தோன்றினால் உஷ்ண வாயு என்றும் கூறப்படுகிறது.
h)இரத்தினால் தோன்றும் வாயு – உதிர வாயு.

வாயுத் தொல்லைக்கு மருந்து சாப்பிடும் முன், அது ஏற்படுவதற்கு மூல காரணத்தை கண்டுபிடித்து அதனை சரி செய்ய வேண்டும். அது தான் நல்லது.

வாயு உண்டு பண்ணும் உணவுப் பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
நாம் அவசர அவசரமாகச் சாப்பிடும் போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, காபி, டீ மற்றும் புட்டுப் பானங்களை அதிகமாக குடிக்கும் போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம்.

இந்த காற்றில் 80 சதவீதம் இரைப்பை வழியாக வெளியேறி விடுகிறது. மீதி குடலுக்குச் சென்று அசௌகரியமாக வெளியேறுகிறது.

அடுத்ததாக, குடலில் உணவு செரிக்கும்போது அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பல வகையான வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சற்று சுழல் கெட்டு விடும்.

எனவே, இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சத்தியாக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது.

சாதாரணமாக நாம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நல்லது தான் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.

கெட்ட வாடை ஏன் வருகிறது என்றால்
பொதுவாக ஹைட்ரஜனும் மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் பூஸ்வானம் சத்தம் மட்டுமே கேட்கும்.

இந்த கலவை அதிகமாகிவிட்டால் சத்தம் கூட கேட்கலாம்.

வாயு அதிகமாகப் பிரிவது ஏன் என்றால்
நாளொன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.
இதற்கு மேலாக அதிகரித்தாலோ வயிற்றில் வலி, இரைச்சல், உப்புசம், புளித்த எரிச்சல் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும்.

பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவுகளையும், ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதால் இதற்கு முதன்மைக் காரணம்.

மலச்சிக்கல், குடல்புழுக்கள்,
அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள்
போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.
குடல் காசநோய்,
புற்றுநோய்,
கணைய நோய்,
போன்றவற்றை இது அடிக்கடி சுட்டிக்காட்டும்.
உடற்பயிற்சி இல்லாதது,
உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பது, தண்ணீரைச் சரியாகக் குடிக்காதது
வாயுவைக் கட்டுப்படுத்த
எண்ணெய் உள்ள உணவு வகைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள்.
தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.

நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம்.

முந்திரி போன்ற கொட்டை வகைகள்,
வாழைக்காய், உருளைக் கிழங்கு,
சேனை கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு,
சர்க்கரைவள்ளிக் கிழங்கு,
சாக்லேட், கேக், பிஸ்கட்,
பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள்,
மென்பானங்கள்,
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள்,
இறைச்சி, முட்டை, பால்,
பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள்,
அப்பளம், வடகம், வினிகர்,
பீர் ஆகியவற்றுடன் எந்த உணவுச் சாப்பிட்டாலும்
உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ,
அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்.

இத்தனையும் சரியாக அமைந்தால்,
வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.
வாயுப் பிரச்சனை தீர தீர்வு
வயிற்றிலுள்ள கெட்ட வாயுக்கள் வெளியேற!?

வயிறு உப்பசம் தவறான உணவுப் பழக்கம்,
புளியேப்பம் அதிகம், நெஞ்சு கரிதல்,
வாயு துர்நாற்றம், மலச்சிக்கல்,
சிறுநீர் எரிச்சல், சிறுநீர் துர்நாற்றம்
பிரச்சினைகள் சரியாக
மாதம் ஒருமுறை சுக பேதி செல்வதற்கு எலுமிச்சையுடன் உப்பு மற்றும் நீர் சேர்த்து காலையில் 1L அருந்த வேண்டும்.

மாதம் ஒரு நாள் பழச்சாறு மட்டுமே சாப்பிட்டு
உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.
கரிவேப்பிலை, சுண்டை வற்றல்,
சுக்கு , ஓமம்,கசகசா,
நாட்டு பசு நெய்யில் ஒவ்வொரு பொருளாகப் போட்டு பொன்னிறமாக வறுத்து
பின்னர் ஒன்றாக சேர்த்து கலந்து அரைத்து
சூரணமாக எடுக்கவும்.

இந்த சூரணத்தை எடுத்து வெந்நீரில்
நாள் தோறும் காலை மாலை சாப்பிட வர
நாற்றத்துடன் கூடிய கெட்ட வாயு பிரச்சனை சரியாகும்.
சுக்கு மல்லி காப்பி வாயுக்கு நல்லது.

பசும்பாலில் பத்து பூண்டு பற்களைப் போட்டு காய்ச்சி குடித்தால் வாயு போகும்.
முடக்கத்தான் இலைகளை ரசம் செய்து அருந்த வாய்வினால்
உண்டான உடல் அசதி தீரும்.
மோருடன் சீரகம் இஞ்சி சாறு
உப்பு சேர்த்துப் பருகினால்
வாயுத் தொல்லை நீங்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE