'நகம்' சொல்லும் கதை!

By செய்திப்பிரிவு

சமீபத்தில் ஒரு நடுத்தர வயது பெண் , டயாபடீஸ் தொடர்பான சிகிச்சை பெற என்னிடம் வந்தார்.

மருந்து மாத்திரைகள், உணவு முறைகள் எழுதி கொடுத்த பின் , கிளம்பும் போது, தனது நகத்தை காட்டினார்.

நகங்கள் கருப்பாக , வலுவிழந்து காணப்பட்டன.
இவ்வாறு இருப்பதற்கு 2 காரணங்கள் உள்ளன.

முதல் காரணம் :-

இரும்பு சத்து ( iron), பயோட்டின் ( Biotin) விட்டமின் B12 , விட்டமின் டி (vitamin D ) போன்ற முக்கியமான சத்துகள் குறைவாக உள்ளவர்களுக்கு, தொடந்து பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற தண்ணீரில் புழங்கும் வேலைகள் செய்வோருக்கு, நகங்கள் இது போன்று இருக்கும்.

இரண்டாவது காரணம் :-

Onychomycosis எனப்படும் பூஞ்சை கிருமியால் ஏற்படும் FUNGAL INFECTION.

இதனை உறுதி செய்ய KOH MOUNT எனப்படும் எளிய பரிசோதனை செய்ய வேண்டும்.

பூஞ்சை இருப்பதை உறுதி செய்தால்,ANTI FUNGAL மாத்திரைகள் மற்றும் கிரீம் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு வாராமல் தடுப்பது எப்படி ?

சுகர் உள்ளவர்கள் விட்டமின் B12 , biotin மற்றும் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை தினமும் உண்ண வேண்டும்.
முட்டை, பால், மீன், மாமிசம்
முருங்கைக்கீரை, பசலை கீரை
ஆட்டு ஈரல், சுவரொட்டி
பூசணி விதைகள், சியா விதைகள், சாலியா விதைகள் (Halim seeds)
எள்ளு உருண்டை ( இனிப்பு சேர்க்காமல்)
கம்பு, கேழ்வரகு, சிவப்பரிசி தோசை
காளி பிளவர், பிராக்கொளி, நெல்லிக்காய்
பச்சை பட்டாணி, கொண்டை கடலை, வேர்கடலை
சுண்டைக்காய், பாகற்காய், வெந்தயம்

இவற்றுடன் தினமும் 30 நிமிடம் சூரிய ஒளி படும்படி நடை பயிற்சி.
அகத்தின் அழகு முகத்திலே மட்டுமல்ல, நகத்திலும் !

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE