Oral Sex எனும் வாய்வழிப் புணர்ச்சி சரியா? தவறா?

By செய்திப்பிரிவு

இயற்கைக்குப் புறம்பானதென்பது மிகவும் தவறு. புணர்ச்சி வகைகளுள் அதுவும் ஒன்றென்பதே சரி. காமசாஸ்த்ரா நூல் முதல் , கஜுரஹோ சிற்பங்கள் வரையில், வாய்வழிப்புணர்ச்சி , அவசியமான ஒன்றாக இருப்பதால்தான் அது, வலியுறுத்திச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்திலும் (தனிப்பாடல் திரட்டு), "சும்பனம்" என்ற பெயரில், வாய் வழிப்புணர்ச்சி கூறப்பட்டுள்ளது.

அடுத்தவர்களைத் திட்டும் கெட்டவார்த்தைகளிலும், இதைக் குறிக்கும் கொச்சைவடிவம், சரளமாகப் புழங்குவதைக் கவனியுங்கள். கி. ராஜநாராயணன் மற்றும் கரிச்சான்குஞ்சு ஆகிய இருவரும் தொகுத்த, நாட்டுப்புறப் பாலியல்கதைகளின் தொகுப்பு நூலான "மறைவாய்ச் சொன்ன கதைகள்" என்ற நூலிலும், வாய்வழிப்புணர்ச்சியையும் பிரதானமாகக் கொண்ட கதைகள் இடம்பெற்றுள்ளன. பரவலான நடைமுறையில், வாய்வழிப்புணர்ச்சி இருந்திருக்காவிட்டால், கெட்டவார்த்தைகளிலோ, நாட்டுப்புறப் பாலியல் கதைகளிலோ, இவ்வளவு சரளமாகப் புழங்கியிருக்க வாய்ப்பில்லை. மக்களிடையே சரளமாகப் புழங்கக்கூடிய வாய்வழிப்புணர்ச்சி, எப்படி இயற்கைக்கு மாறானதாகும்?

பிரதான புணர்ச்சியின்போது, எளிதாக உச்சகட்டத்தை அடைய இயலாதவர்களுக்கும், பிறப்புறுப்பு பலவீனவாதிகளுக்கும், வாய்வழிப் புணர்ச்சியானது பேருதவியாக அமைந்து, பெரியஅளவிலான உற்சாகத்தை அளிக்கிறது. வாய்வழிப் புணர்ச்சியின் நுட்பத்தையும், சிறப்பையும், தாந்த்ரீகம் திறம்பட விளக்குகிறது.

வாய்வழிப் புணர்ச்சியை விரும்புவதும், வெறுப்பதும் தனிநபருடைய விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டது என்பது உண்மை. ஆனால், இது இயற்கைக்கு முரணானது என்பது பொய். ஆணுறுப்பு விரைப்பின்மை அல்லது விந்து முந்துதல் உள்ளிட்ட நோய்களுக்குச் சில சமயங்களில் வாய்வழிப்புணர்ச்சியும் சிறப்பான தீர்வு தருகிறது என்பதைப் பலரும் அறிவதில்லை. முரட்டுத்தனமான உடல்வாகும், புணர்ச்சி வெறியும், கொண்டவர்களை, வாய்வழிப்புணர்ச்சி அல்லாது, பிரதானமான புணர்ச்சியாலேயே உச்சகட்டமும், போதிய அளவு பாலுறவுத் திருப்தியும் அடைவிப்பதென்பது மிகவும் கடினம்.

இவ்வாறு பலவழிகளிலும் உதவக்கூடிய, பல்வேறு காலகட்டங்களிலும் பரவலாக சமூக நடைமுறையிலிருந்த, வாய்வழிப்புணர்ச்சியை, இயற்கைக்கு ஒருபோதும் மாறானதன்று.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE