பழம் பசியைத் தூண்டும், குருதியை உண்டாக்கும். வாந்தியை நிறுத்தும். மலத்தைக் கட்டும். குடலுக்கும் உடலுக்கும் பலத்தைக் கொடுக்கும். விந்தை உற்பத்தி செய்யும். பித்தக் கோளாறுகள் யாவும் நீங்கும்.
விளாம்பழத்தைச் சுட்டு அதன் சதையை எடுத்து மிளகாய், வெங்காயம், உப்பு, கொத்தமல்லி, துவரம்பருப்பு வறுத்து சேர்த்துத் துவையல் அரைத்து சாப்பிட்டால் பித்தம் தணிக்கும், பித்தத்தினால் வரும் 1 தலை சுற்று நீங்கும்.
விளாமர இலை கொழுந்தை அரைத்து 10 கிராம் மோரில் மூன்று வேளை சாப்பிட வயிற்றோட்டம் நிற்கும். மூன்று நாள் இரு வேளையும் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
விளாந்தளிர், நாரத்தையின் தளிர், கருவேப்பிலை, எலுமிச்சையின் இலை, சம அளவு உலர்த்திய பொடி 100 கிராம், மிளகு 10 கிராம், வெந்தயம் 10 கிராம் கடலைப் பருப்பு வறுத்து பொடி 100 கிராம் உப்பு 20 கிராம், சேர்த்துக் கலந்து பொடி உணவில், சேர்த்துப் சாப்பிட பித்தம் குணமாகும், பசி எடுக்கும், வாந்தி குணமாகும். உடலுக்கும் ஊட்டமுடையதாகும்.
குட்டி விளாம் என்பது நிலத்தில் படர்ந்துள்ள குத்துச் செடியாகும். விளாமரத்தின் இலை இருக்கும். இது பூக்காது. காய்க்காது. ஆனாலும் இதன் இலை மருத்துவ குணம் உடையது. சிறு குழந்தைகளுக்கு வயிற்றோட்டம், வாந்திக்கு அரைத்து வெந்நீரில் கொடுக்கலாம். சளிக்கு துளசியுடன் சேர்த்துச் சாறு பிழிந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வரும் வெப்பக் கொப்புளங்களுக்கும், அரிப்பு, தடிப்புகளுக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். குணமாகும். தோல் மென்மையாக இருக்கும். மிளகு ரசத்தில் இதன் இலையை கறிவேப்பிலையைப் போல் போட்டால் மணமாக இருக்கும்.
விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள்உறுப்பு ரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும். உப்பில்லாப் பத்தியம் தேவை. இலை, பூ, பழம், பட்டை, வேர் ஆகியவற்றைச் சமனளவு உலர்த்திப் பொடித்து வேளைக்கு 5 கிராமாக சிறிது சர்க்கரையுடன் உண்டு வரப் பித்த மிகுதி, பசி யின்மை, பேதி, சீதபேதி, உமிழ்நீர் மிகுதியாகச் சுரத்தல் ஆகியவை தீரும். விளாமரத்தின் காயைக் கொண்டு வந்து அதை முழு அளவில் ஒரு சட்டியில் போட்டு,காய் நனையும் அளவிற்குத் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வெந்த பின் இறக்கி உடைத்து உள்ளேயுள்ள சதையை மட்டும் எடுத்து, அத்துடன் அரை டம்ளர் அளவு தயிர் சேர்த்துக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் சீதபேதி, வயிற்றுப் போக்கு பூரணமாக குணமாகும்விளாம் பழம்.
பழம் பசியைத் தூண்டும், குருதியை உண்டாக்கும். வாந்தியை நிறுத்தும். மலத்தைக் கட்டும். குடலுக்கும் உடலுக்கும் பலத்தைக் கொடுக்கும். விந்தை உற்பத்தி செய்யும். பித்தக் கோளாறுகள் யாவும் நீங்கும்.
விளாம்பழத்தைச் சுட்டு அதன் சதையை எடுத்து மிளகாய், வெங்காயம், உப்பு, கொத்தமல்லி, துவரம்பருப்பு வறுத்து சேர்த்துத் துவையல் அரைத்து சாப்பிட்டால் பித்தம் தணிக்கும், பித்தத்தினால் வரும் 1 தலை சுற்று நீங்கும்.
விளாமர இலை கொழுந்தை அரைத்து 10 கிராம் மோரில் மூன்று வேளை சாப்பிட வயிற்றோட்டம் நிற்கும். மூன்று நாள் இரு வேளையும் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
விளாந்தளிர், நாரத்தையின் தளிர், கருவேப்பிலை, எலுமிச்சையின் இலை, சம அளவு உலர்த்திய பொடி 100 கிராம், மிளகு 10 கிராம், வெந்தயம் 10 கிராம் கடலைப் பருப்பு வறுத்து பொடி 100 கிராம் உப்பு 20 கிராம், சேர்த்துக் கலந்து பொடி உணவில், சேர்த்துப் சாப்பிட பித்தம் குணமாகும், பசி எடுக்கும், வாந்தி குணமாகும். உடலுக்கும் ஊட்டமுடையதாகும்.
குட்டி விளாம் என்பது நிலத்தில் படர்ந்துள்ள குத்துச் செடியாகும். விளாமரத்தின் இலை இருக்கும். இது பூக்காது. காய்க்காது. ஆனாலும் இதன் இலை மருத்துவ குணம் உடையது. சிறு குழந்தைகளுக்கு வயிற்றோட்டம், வாந்திக்கு அரைத்து வெந்நீரில் கொடுக்கலாம். சளிக்கு துளசியுடன் சேர்த்துச் சாறு பிழிந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வரும் வெப்பக் கொப்புளங்களுக்கும், அரிப்பு, தடிப்புகளுக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். குணமாகும். தோல் மென்மையாக இருக்கும். மிளகு ரசத்தில் இதன் இலையை கறிவேப்பிலையைப் போல் போட்டால் மணமாக இருக்கும்.
விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள்உறுப்பு ரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும். உப்பில்லாப் பத்தியம் தேவை. இலை, பூ, பழம், பட்டை, வேர் ஆகியவற்றைச் சமனளவு உலர்த்திப் பொடித்து வேளைக்கு 5 கிராமாக சிறிது சர்க்கரையுடன் உண்டு வரப் பித்த மிகுதி, பசி யின்மை, பேதி, சீதபேதி, உமிழ்நீர் மிகுதியாகச் சுரத்தல் ஆகியவை தீரும். விளாமரத்தின் காயைக் கொண்டு வந்து அதை முழு அளவில் ஒரு சட்டியில் போட்டு,காய் நனையும் அளவிற்குத் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வெந்த பின் இறக்கி உடைத்து உள்ளேயுள்ள சதையை மட்டும் எடுத்து, அத்துடன் அரை டம்ளர் அளவு தயிர் சேர்த்துக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் சீதபேதி, வயிற்றுப் போக்கு பூரணமாக குணமாகும்...