5 வகையான சட்னி செய்வது எப்படி?

By தேஜஸ்

1) தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிது
புளி – சிறிது
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுந்து பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சில
செய்முறை:
1. அனைத்தையும் அரைத்து மிருதுவான விழுதாக்கவும்.
2. தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

2) தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
தக்காளி – 3
வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 3 பல்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு, புளி – தேவைக்கு
செய்முறை:
1. எண்ணெயில் வெங்காயம், பூண்டு, மிளகாய் வதக்கவும்.
2. தக்காளி சேர்த்து மசியும் வரை வேக வைக்கவும்.
3. ஆறிய பின் அரைக்கவும்.

3) புதினா சட்னி
தேவையான பொருட்கள்:
புதினா – 1 கப்
கொத்தமல்லி – ½ கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிது
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு
செய்முறை:
1. அனைத்தையும் அரைத்து பரிமாறவும்.

4) கொத்தமல்லி சட்னி
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலை – 1 கட்டு
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிது
புளி – சிறிது
உப்பு
செய்முறை:
அனைத்தையும் அரைத்து பரிமாறவும்.

5) நிலக்கடலை சட்னி
தேவையான பொருட்கள்:
நிலக்கடலை – ½ கப் (வறுத்தது)
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 2 பல்
புளி – சிறிது
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை
செய்முறை:
1. அரைத்து பின் தாளித்து சேர்க்கவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE