மீல்மேக்கர் குழம்பு

By செய்திப்பிரிவு

தேவையான பொருட்கள்

மீல்மேக்கர் -  150 gm 

பெரிய வெங்காயம் - 2 

மல்லித்தூள் - 3  ஸ்பூன்

மிளகாய்த்தூள் -  ஒன்றரை ஸ்பூன்

மஞ்சள் தூள்  - அரை ஸ்பூன்

நல்லெண்ணெய் -  6  ஸ்பூன்

தேங்காய் துருவல்  - 3  ஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 6 

உப்பு  - தேவையான அளவு

 

பூண்டு  - 10  பல்

இஞ்சி  - 5  சின்னத்துண்டு

பட்டை - 2  துண்டு 

கல்பாசி - 1  ஸ்பூன்

கிராம்பு - 4 

 சோம்பு - 1  ஸ்பூன்

 

தாளிப்பதற்கு பட்டை, சோம்பு, கறிவேப்பிலை  - சிறிதளவு

 

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - 15

மிளகு  - 1  ஸ்பூன்

 சீரகம் - 1 ஸ்பூன்

 தக்காளி  - 2 

 

செய்முறை வீடியோ பார்க்க https://youtu.be/y71ahMYV3Aw?si=YcTEyhUCXh_y_Sxb

 

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கர்,  சிறிதளவு உப்பு சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.

 

பின்பு தண்ணீரை வடிகட்டி பச்சைத் தண்ணீரில் இரண்டு தடவை அலசி தண்ணீரை  பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

 

கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு,  சீரகம்,  சின்ன வெங்காயம்,  தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பும், சிறிது தண்ணீர் சேர்த்து  நன்கு அரைத்துக் கொள்ளவும்.

 

இஞ்சி ,பூண்டு, பட்டை, சோம்பு ,கிராம்பு , கல்பாசி சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

 

குக்கரை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி பட்டை,  சோம்பு,  கறிவேப்பிலை போட்டு தாளித்து  அதனுடன் பெரிய வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி விட்டு  அரைத்து வைத்துள்ள  இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு  பச்சை வாசனை போக வதக்கவும்.

 

அதனுடன் மல்லித்தூள் ,மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

 

அதனுடன் தக்காளியும் சேர்த்து சிறிது வதக்கி விட்டு மீல்மேக்கர் சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள மசாலா விழுது,  மூன்று டம்ளர் தண்ணீர் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து  நன்கு கலந்துவிட்டு  குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கி மல்லி  இலை தூவி கலந்து விட்டால் மிகவும் சுவையான மீல்மேக்கர் குழம்பு ரெடி.

 

இந்த மீல்மேக்கர் குழம்பு மட்டன் குழம்பு ருசியில் இருக்கும்.

 

இந்த குழம்பு சாதம், இட்லி, சப்பாத்தி எல்லாத்துக்குமே ரொம்ப சூப்பரா இருக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE