புளி குழம்பு செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையானவை:

▢1 முருங்கைக்காய் ▢1 cup துருவிய தேங்காய் ▢15 சின்ன வெங்காயம் ▢¼ tsp மஞ்சள் தூள் ▢½ tsp மிளகாய் தூள் ▢புளி எலுமிச்சை பழ அளவு ▢¼ tsp கடுகு ▢½ எலுமிச்சை உளுத்தம் பருப்பு ▢1 மிளகாய் வற்றல் ▢1 கொத்து கறிவேப்பிலை ▢3 tbsp நல்எண்ணெய் ▢தேவையான அளவு தண்ணீர்                      ▢தேவையான அளவு உப்பு                              

செய்முறை 
▢ புளிக்கறி செய்ய முதலில் புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்....
▢ பின் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.... 
▢ கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி சிறு துண்டுகளாக கட் செய்து வைத்திருக்கின்ற முருங்கைக்காயை அதில் போட்டு வேக வைக்க வேண்டும்....
 ▢ அதில் புளி கரைசலை உற்ற வேண்டும். அரைத்து விழுதை முருங்கைக்காய் கலவையில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும். சிறிது உப்பு போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்....
▢ வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும்....
 ▢ பின்னர் முருங்கைக்காய் கலவை வேக வைத்த பின் தாளித்தவற்றை அதில் போட வேண்டும். இப்பொழுது சுவையான புளிக்கறி தயார்... 

நன்றி: sivakarthika

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE