கற்பூரவள்ளி சட்னி செய்வது எப்படி?

By தேஜஸ்

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக அதே கடாயில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் அரை தேக்கரண்டி தனியா, அரை தேக்கரண்டி மிளகு , அரை தேக்கரண்டி சீரகம், காய்ந்த வத்தல் மூன்று சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் சிறிய முழு நெல்லிக்காய் அளவு புளி சேர்த்துக் கொள்ளலாம். வறுத்த இந்த பொருட்களை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி விட வேண்டும். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு கைப்பிடி அளவு கற்பூரவள்ளி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கற்பூரவள்ளி இலை நல்ல வதங்கி வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது நாம் வறுத்த பொருட்களின் புளியை தனியாக எடுத்து வைத்து விட்டு மற்ற பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து தனியாக முதலில் அரைத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக புளி, கற்பூரவள்ளி இலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த துவையல் அரைக்கும்பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

சற்று கெட்டியாக கொரகொரப்பாக அரைத்தால் கற்பூரவள்ளி துவையல் தயார். இதனுடன் பொடியாக நறுக்கிய ஐந்து சின்ன வெங்காயம், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது சூடான சாதம், இட்லி, தோசை, பழைய சோறு என அனைத்திற்கும் கச்சிதமான கற்பூரவள்ளி துவையல் தயார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE