கொள்ளு பருப்பு குழம்பு செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையானவை:

கொள்ளு -  150 gram
சின்ன வெங்காயம் -  20 
தக்காளி - 2 
பூண்டு -  10 பல்
தேங்காய் நறுக்கிய துண்டுகள்    - 10
காய்ந்த மிளகாய் -  5 
வர கொத்தமல்லி  - 1 ஸ்பூன்
சீரகம் - 1  ஸ்பூன்
 கடுகு - 1  ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்  - 3 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு 
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை  
கொள்ளு பருப்பு நன்கு கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்த கொள்ளு  4 டம்ளர் தண்ணீர்  சிறிதளவு உப்பு சேர்த்து  ஏழு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும.

கடாயை அடுப்பில் வைத்து  ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, சீரகம், காய்ந்த மிளகாய்,சேர்த்து சிறிது வதக்கி விட்டு அதனுடன் சின்னவெங்காயம், பூண்டுபோட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கி  அதனுடன் தேங்காயும் சேர்த்து சிறிது வதக்கி விட்டு  ஆற வைத்துக் கொள்ளவும்.

ஆற வைத்த மசாலாவுடன் இரண்டு  கரண்டி கொள்ளு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு கடாய் அடுப்பில் வைத்து  இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு,  சீரகம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு இதனுடன் தக்காளியும் சேர்த்து நன்கு மசிய வதக்கி  அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து விட்டு மீதமுள்ள கொள்ளுவை அந்த தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும்.

அதனுடன்  ஒரு டம்ளர் தண்ணீர், உப்பு,  சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு மல்லி இலைகளை தூவி இறக்கினால் மிகவும் சுவையான கொள்ளு பருப்பு குழம்பு ரெடி

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE