கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையானவை :
கத்திரிக்காய் (பெரியது) – 4 – காம்பை மட்டும் வெட்டவும்
பச்சை மிளகாய் – 5 – நீளமாக நறுக்கவும்
புளி விழுது - 1 தே. கரண்டி
ந.எண்ணெய், உப்பு தேவைக்கு
தாளிக்க :
கடுகு – 1/2 தே. கரண்டி
உளுந்து - 1/2 தே. கரண்டி
கருவேப்பிலை
கத்திரிக்காய் சட்னி

செய்முறை :
கத்திரிக்காயை காம்பு மட்டும் நறுக்கி, வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி நன்றாக வதக்கவும்.

வாணலியில் இருந்து எடுத்து வைக்கவும். ஆறிய பின் அதன் மேலிருக்கும் தோலியை உரித்து எடுக்கவும்.
கை வைத்தே மசித்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும்.

புளி விழுது, உப்பு, சிறிது தண்ணீர், மசித்த காய் எல்லாம் போட்டு சற்று வத்தியவுடன் இறக்கவும்...

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE