சிக்கன் சூப் ரசம் செய்வது எப்படி?

By சரவணன்

தேவையானவை:

சிக்கன் - 150 கிராம்
சின்ன தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
கருவேப்பில்லை - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் உருண்டை அளவு
பட்டை - 2
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பூண்டு - 4 பல்
பிச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி / பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கடுகு / உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:
முதலில் புளியை தண்ணீர் 30 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் சாறை எடுத்துக்கொள்ளவும்.
பின்பு, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
பின்பு சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, சிக்கன் வேகும் வரை அதனை மூடி வைக்கவும்.
சிக்கன் வெந்த பிறகு, அதில் உள்ள சூப்பை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

பின்பு, மிளகு, ஜீரகம் மற்றும் பூண்டு இவை அனைத்தையும் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
சிக்கன் சூப்பில், மிளகு, ஜீரகம் மற்றும் பூண்டு அரைத்த கலவையை சேர்க்கவும்
பின்பு புளி தண்ணீர் மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

ஒரு பாத்திரத்தில், சிறிதளவு எண்ணெய், கடுகு உளுத்தம்பருப்பு மற்றும் சிறிதளவு கருவேப்பில்லை சேர்த்து அதனுடன் ரசத்தையும் சேர்த்து தாளிக்கவும்.

கொதிநிலை வரும் முன்னே சிக்கன் சூப் ரசத்தை இறக்கிவிடவும்.

சுவையான மணமான சிக்கன் சூப் ரசம் அல்லது கோழி சூப் ரசம் தயார். உங்கள் குழந்தைகளுக்கு சாதத்துடனோ அல்லது சூப் ஆகவோ கொடுத்து பாருங்கள், மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE