மாங்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையானவை:

பெருங்காயம் சிறிதளவு
கறிவேப்பிலை கொஞ்சம்
6 மாங்காய் வற்றல்
1 ஸ்பூன் மிளகு
காய்ந்த மிளகாய்
½ ஸ்பூன் கடுகு
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு செய்முறை

செய்முறை:

முதலில் 3 ஒரு நறுக்கி உப்பு போட்டு 3 நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளவும்)

முதலில் ஒரு பாத்திரத்தில் மாங்காய் வற்றலை வெந்நீரில் ஊறவைக்கவும்.

பின் வாணலில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக்கொள்ளவும்.

பிறகு சிறிது எண்ணைய் வாணலில் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, அரைத்த விழுது, ஊறவைத்த மாங்காய் வற்றல், சேர்த்து அத்துடன் புளிக்கரைசலை சேர்த்து, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்தபின் இறக்கவும் இப்பொழுது சுவையான மாங்காய் வற்றல் குழம்பு தயார்....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE