செட்டிநாடு மிளகு கத்தரிக்காய் செய்வது எப்படி?

By சரவணன்

தேவையானவை:

கத்தரிக்காய்- 4
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஆர்க்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும். கத்தரிக்காயை நீளமாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் தக்காளி, கத்தரிக்காயை வதக்கவும். (தக்காளியில் இருக்கும் தண்ணீரே போதுமானது. மேலும் தேவையானால் 2 ஸ்பூன் தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்).

காய் வெந்ததும் மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி சிம்மில் வைக்கவும்.
அடுப்பில்லிருந்து எடுக்கும் சமயத்தில் மிளகு தூள் சேர்த்து பிரட்டி எடுக்கவும்...

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE