நோன்பு கஞ்சி செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையானவை:

வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
கேரட் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கடலை பருப்பு - ஒரு பிடி
மல்லி இலை - ஒரு பிடி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
தேங்காய் பால் - ஒரு கப்
பச்சரிசி - ஒரு குவளை
சிக்கன் துண்டுகள் - ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கிராம்பு, பட்டை, ஏலக்காய் - தலா 2
நெய் - 4 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை
தேவையானவற்றை தயாராய் வைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் கடலைப் பருப்பை கழுவி விட்டு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

பருப்பு வெந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, வெந்தயம், மல்லி, கேரட், உருளை இவை அனைத்தையும் போட்டு மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் அரிசியை கழுவி போடவும். மீண்டும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். அரிசி போட்டபின் அவ்வப்போது திறந்து கிளறி விடவும், இல்லையென்றால் அடிபிடிக்கும்....

அரிசி நன்றாக குழைய வெந்ததும் உப்பு, தேங்காய் பால் சேர்க்கவும். தேங்காய் பால் திக்காக இருக்க வேண்டும்.

வேறொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய், பட்டை போட்டு தாளித்து வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் கோழிக்கறி மற்றும் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து கறி வேகும் வரை வதக்கவும்.

எல்லாம் நன்றாக வதங்கிய பின் தாளித்ததை கஞ்சியில் ஊற்றி கலக்கி விடவும்.

சூடான சுவையான நோன்பு கஞ்சி தயார். இதனுடன் வடகம் துவையல் பெஸ்ட் காம்பினேஷன். நோன்பு பிடிக்கும் அனைத்து முஸ்லீம்கள் வீட்டிலும் கட்டாயமாக இந்த கஞ்சி இருக்கும். நோன்பு கஞ்சி குடிக்க ஆசை இருக்கும்" முஸ்லீமல்லாத தோழிகள் அனைவருக்கும் இந்த குறிப்பு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE