தேவையானவை:
கம்பு - ஒரு கப்
கூழ் கரைக்க:
வெங்காயம் - ஒன்று
தயிர் - அரை கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
கம்பை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
கம்பு ஊறியதும் எடுத்து ஊறிய தண்ணீரை வடித்து விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். (காலையில் ஊற வைத்து 11 மணி போல் அரைத்து வைத்தால் இரவில் கூழ் கிண்டி விடலாம்.)
அகன்ற பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள கம்பு மாவுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றவும்.
இடை விடாமல் கிண்டிக் கொண்டே இருக்கவும். சற்று கெட்டியான பதம் (களி பதத்திற்கு) வந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.
இதை 8 மணி நேரம் வெளியில் வைத்து புளிக்க விடவும்.
அடுத்த நாள் காலையில் கெட்டியாக இப்படி இருக்கும். கூழிலிருந்து சிறிது எடுத்து அதனுடன் வெங்காயம், தயிர், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும்.
கெட்டியான கூழுடன் மீன் (அ) கருவாட்டு குழம்பு சேர்த்தும் சாப்பிடலாம்.
சுவையான வெயிலுக்கு இதமான உடலுக்கு குளிர்ச்சியான கம்பங்கூழ் தயார்.
கம்பை சற்று கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அரைத்த பின் 8 மணி நேரம் நன்கு புளிக்க விட வேண்டும்.
கூழ் செய்த பிறகும் 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும். கூழ் புளித்தால் தான் சுவையாக இருக்கும்.
ராகி பானம்:
தேவையான பொருள்கள்
ராகி பவுடர் - இரண்டு தேக்கரண்டி
பால் - முக்கால் டம்ளர்
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
நெய் - ஒரு சொட்டு
சஃப்ரான் - நான்கு இதழ்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.
டம்ளரில் முக்கால் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ராகி மாவை போட்டு கலக்கிக் கொள்ளவும்.
கலக்கி வைத்திருக்கும் ராகி மாவை வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டியில் இருக்கும் கப்பியை எடுத்து மீண்டும் முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து அதே போல் மீண்டும் வடிகட்டவும்.
வடிகட்டிய ராகி மாவை அடுப்பில் வைத்து ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும். ராகி மாவு நன்கு வெந்து கொதித்து பொங்கி வரும் வரை காய்ச்சவும்.
கரண்டியால் ஒரு முறை கலக்கி விட்டு அதில் பாலை சேர்க்கவும்.
அதனுடன் சஃப்ரான் மற்றும் ஒரு சொட்டு நெய் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.
சுவையான தெம்பான ராகி பானம் ரெடி.
சத்துமாவு கஞ்சி
தேவையான பொருள்கள்
கோதுமை - 200 கிராம்
உளுந்து - 200 கிராம்
கேழ்வரகு - 200 கிராம்
கம்பு - 200 கிரம்
சோயா - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 200 கிராம்
பாசிப்பயறு - 200 கிர் ம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
ஜவ்வரிசி - 100 கிராம்
ஏலக்காய் - 10
செய்முறை
தானிய வகைகள் அனைத்தையும்சுத்தம்செய்து,தனித்தனியாக ஊறவைக்கவும்.
நீரைவடியவைத்துமுளைக்கவிடவும்.
பிறகு இவற்றை நிழலில் உலர்த்தி,வறும் வாணலியில் வாசனை வரும்படி,தனித்தனியாக வறுத்துஎடுக்கவும்.
புழுங்கலரிசி,ஜவ்வரிசி,பொட்டுக்கடலையும் தனியாக வறுத்துக்கொள்ளவும்.
நன்கு ஆறியதும் இத்துடன் ஏலக்காயும்சேர்த்து மிக்சியில் நைசாகப்பொடிக்கவும்.
2டேபிள் ஸ்பூன் மாவை ஒருகப்தண்ணீரில் கரைத்துக்கொண்டுவைக்கவும்.
ஒருகப் பாலைக்கொதிகவைத்து,அதில் கரைத்துவைத்திருக்கும்
மாவுக்கரைசலையுமூற்றிசர்க்கரையும்சேர்த்து5 நிமிடங்கள் கொதிக்கவிட்டுஇறக்கவும்.
இதுபோல சத்துமாவுப்பொடி தயார்செய்து வைத்துக்கொண்டால் எப்பொழுதுவேண்டுமானாலும்,இனிப்பாகவோ, உப்புகலந்தோ சத்தான கஞ்சி செய்துவிடலாம்.
அனைவருக்குமே ஏற்ற சத்தானகஞ்சி இது.
கேழ்வரகு கூழ்
தேவையான பொருள்கள்
கேழ்வரகு மாவு - 1/2 கப்
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 கப்
செய்முறை
கேழ்வரகு மாவை தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து வேக விடவும்.
மாவு வெந்தவுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும். இது மிகவும் எளிய முறை.
காலையில் ஒரு டம்ளர் குடித்தாலே போதும். நல்ல தெம்பாக இருக்கும். டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது. இது 4 டம்ளர் வரும்.
அரிசி கஞ்சி
தேவையான பொருள்கள்
பிரவுன் அரிசி - அரை கப்
பாஸ்மதி அரிசி - கால் கப்
சம்பா அரிசி - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய், உப்பு - சிறிது
செய்முறை
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பிரவுன் அரிசியை 5 மணி நேரம் ஊற வைக்கவும்.முதலில் பிரவுன் அரிசியை வேக வைத்து, பின்பு அதனுடன் சம்பா அரிசி, பாஸ்மதி அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு குழைந்து சேர்ந்து வந்ததும் தேங்காய், உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தேவைக்கேற்ப நீர் சேர்த்து பரிமாறவும்.
உணவு ஒவ்வாமை, ஜுரம், வயிற்று வலி, ஜலதோஷம் போன்ற சமயத்தில் சாப்பிட ஏற்ற உணவிது.
ஒரே அரிசியாக இல்லாமல் கலந்து செய்வதால், சேர்க்கும் அரிசியை வேகும் பதம் பார்த்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.