தேவையானவை:
பாசிப்பருப்பு – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 3
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கப்
பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
கசகசா – ஒரு டீஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 10
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ – சிறிதளவு
வெங்காயம் – 2
கருவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – 2,
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் பாசிப்பருப்பையும் சேர்த்து, சுத்தம் செய்து வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், இந்த பருப்பும் உருளைக்கிழங்கும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு டீஸ்பூன் மட்டும் உப்பு போட்டு குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை விட்டு எடுக்க வேண்டும்.
விசில் முற்றிலும் நீங்கிய பிறகு இதில் இருக்கும் உருளைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, கசகசா, ஒரு டீஸ்பூன் சோம்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தலும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் சோம்பு சேர்த்து இவை அனைத்தும் நன்றாக வாசனை வந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் ஓரளவுக்கு வதங்க வேண்டும்.
கண்ணாடி பதம் வந்ததும் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து இதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக தக்காளி வேகம் வரை ஐந்து நிமிடம் வதக்க வேண்டும். பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் சேர்த்து இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதை மூடி போட்டு ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள்.
ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் நாம் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விட்டு மறுபடியும் ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள். பாசிப்பருப்பு நன்றாக கொதித்த பிறகு நாம் வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்து இதனுடன் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மேலே கொத்தமல்லி தலையை தூவி இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான கும்பகோணம் கடப்பா தயாராகிவிட்டது....