தேங்காய் சாதம் செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையானவை:

பொருள் - அளவு
அரிசி 1 கப்
தண்ணீர் 2 கப்
தேங்காய் துருவல் கால் கப்
கடுகுஅரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு2 டீஸ்பூன்
முந்திரிகால் கப்
உளுத்தம் பருப்பு2 டீஸ்பூன்
வரமிளகாய்4
பெருங்காயம்1 சிட்டிகை
கறிவேப்பிலை1 கொத்து
உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :
  முதலில் அரிசியை கால் மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கி, சாதத்தை தட்டில் போட்டு உலர வைக்க வேண்டும்.

  அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, முந்திரி, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

  பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்க வேண்டும். கலவையானது ஓரளவு பொன்னிறமாக மாறும் போது, சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும். இப்போது சூடான மற்றும் சுவையான தேங்காய் சாதம் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : துவையல், ஊறுகாய்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE